பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

 கிற்கும் இடைப்பட்டதான ஒரு நடுத்தர நடையில் அமை வதே பொருத்த முடைய தாகும் எனவே, மேடைத் தமிழ்ப் பேச்சாளர்கள், பாமர மக்களின் மனப்பாங்கிற்கு ஏற்ப மிகவும் இறங்கி விடாமலும், படிப்பிற் சிறந்தோரின் உயரிய மனப் பாங்கிற்கு ஏற்ப மிகவும் உயர்ந்து விடாம லும் இடைப்பட்ட ஒரு நிலையை மேற்கொள்வாராயின், அது எல்லாவகை மனப்பாங்குகளையும் இணைக்கக் கூடிய ஒருவகைப் பாலம் ஆகும்.

_________


புலவர் பகுதி


4.புதுவைபு.அ.பெரியசாமிப்பிள்ளை

பெரியசாமி:

"புதுச்சேரி என்றால் என்னவோ என்று எண்ணிவிட வேண்டா; இங்கே ஒரு சாமி இருக்கிறது; சாமி என்றால் சாமியிலும் சாமி பெரிய சாமி"-

இந்தப் புகழுரை, 'புதுவை மகா வித்துவான்’ எனப்படும் பெரும்புலவர் பு.அ.பெரிய சாமிப் பிள்ளையவர்களைப்பற்றி, அன்று மாபெருங்கல்விக் கடலாய் விளங்கிய திருப் பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளார் புதுவைக்கு எழுந்தருளியபோது மொழிந்தது.

புதுவைக்குப் பெருமை

‘சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' என்று புலவர் பிசிராந்தையாரும், எவ்வழி நல்லவர் ஆடவர்