பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

குமாரசாமி புலவரேயன்றி, பரிதி மாற் கலைஞர் என அழைக்கப் பெறும் வி.கோ. சூரிய நாராயண சாத்திரி ,

“காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போல்
நாமோது செந்தமிழின் நன்னூல் பல தொகுத்த
தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றஎவர்
தாமோ தரமுடையார்தண்டமிழ்ச் செந் நாப்புலவீர்”

என இருபொருள் படப் பாடி, தாமோதரம் பிள்ளை என்னும் பெயரை வைத்து விளையாடியுள்ளார். தஞ்சாவூர் சதாவதானச் சுப்பிரமணிய ஐயர் என்பவரோ, மிக நயமாகப் பாடியுள்ளார்:

“சொல்துளைத்த நாவலர்கள் எழுதிவைத்த முதுவீர
சோழி யத்தைச்
செல்துளைத்த புள்ளியன்றி மெய்ப்புள்ளி விரவாத
சென்னா ளேட்டிற்
பல்துளைத்து வண்டுமணல் உழுதவரி எழுத்தெனக்
கொள் பரிசி னாய்ந்து
கல்துளைத்த எழுத்தா அச் சிட்டனன்தா மோதர
னாம் கலைவல் லோனே”

எத்துணை அழகான புகழ்ச்சி பாருங்கள்! இம்மட்டுமா! தாமோதரனாரின் அச்சுப் பதிப்பின் சிறப்பினை இன்னும் புலவர் பலர் பலவாறு பாராட்டிப் பாடியுள்ளனர். புரசை அஷ்டாவ தானம் சபாபதிப் புலவர் என்பார், இராமன் கல்லை மிதித்து அருந்ததி, ஆக்கினாற் போல, தாமோதரர் சிறந்த ஒலைச் சுவடிகளை அழகிய அச்சு நூல்களாக ஆக்கியுள்ளார் என்று பாடியுள்ளார். கோப்பாய் வித்துவான் சபாபதி பிள்ளை என்பவரோ, தாமோதரரால் ஒலையிலிருந்து அச்சு நூல் வெளி வந்தது,மாயையிலிருந்து உலகம் வந்தது, போலவும்-ஒரு வகை இந்திர-