பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அவர்களே. யானும் அம்மாநாட்டில் அவர் தலைமையில் சொற்பொழிவாற்றினேன். யான் பேசத் தொடங்கு முன், தலைவர் என்னைக் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்து முகத்தான், கொடுக்கூரில் ஐயங்கார் பெரியவர் எனக்குக் கனகாபிஷேகம் செய்ய வேண்டும் என்று பாராட்டிப் பேசினாரே-அந்த நிகழ்ச்சியைக் கூட்டத்தில் எடுத்துக்கூறி, அத்தகைய பாராட்டுதலுக்கு உரிய சுந்தர சண்முகம் இப்பொழுது பேசப் போகிறார் என்று என்னைக் கூட்டத்தாருக்கு அறிமுகப்படுத்தினார்.

ஐயையோ என்னைப் பற்றி மிகுதியாகச் சொல்லி விட்டேன் போல் இருக்கிறதே! மன்னிக்க வேண்டுகிறேன். ஒரு சான்றாயினும் தந்தால்தானே, கம்பன் எனக்கு ஓரளவேனும் நன்றாக அறிமுகம் செய்துவைக்கப் பெற்றுள்ளான் என்பது மெய்யாகும்.

அடியேனுக்குக் கம்பனை அறிமுகம் செய்து வைத்த பெரியார்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன். கம்பன் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க.