பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டறக் கலந்து ஓருயிராதல்

கருத் தரித்தல்

ண் மகன் ஏராளமான விந்தணுக்களைத் தருகிருன்றான்; பெண்மணி மாதத்திற்கு ஒன்றாக முதிர்ந்த அண்டத்தைத் தன்னுடம்பில் தாங்கி நிற்கிறாள். ஏதோ ஒரு விந்தணு இவ்வண்டத்தைச் சந்தித்துவிடுகிறது. சந்தித்தவுடனே அவை இரண்டறக் கலந்துவிடுகின்றன. விந்தணுவின் வால்மட்டும்

(அண்டத்திற்குள் விந்தப் பாய்ந்தபின் 24 ஜோடி நிறக்கோல் ஆவதை விளக்கும் படம், தெளிவுபற்றி 3 ஜோடிகள் மட்டும் காண்பிக்கப்பட்டுள்ளன.)

அறுந்து தனியாக வெளியில் நின்றுவிடும். முன் நோக்கி நகர்ந்து செல்வதற்கு வால் இதுவரை பயன்பட்டது. இனிமேல் அதன் உதவி வேண்டியதில்லை. அதனால் அது பிரிந்துவிட்டது.