பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாயப் பிறவி

29


அவையெல்லாம் நஞ்சுக்கொடி மூலம் கருக்குடைக்கு வந்து தாயின் ரத்தத்தில் கலக்கின்றன. அவற்றையும் சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பு தாயின் உடம்பிலுள்ள உட்புற உறுப்புக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.

கருக்குடை வளர்ந்து ஐந்தாவது மாதத்தில் கருப்பையின் உட்சுவரில் பாதி இடத்தை அடைத்துக்கொள்ளும். இவ்வாறு வளர்ந்து கருவை ஊட்டி வளர்க்கும் அது குழந்தை பிறந்தவுடன் நஞ்சாக வெளியில் வந்துவிடுகிறது.

பூரித்த அண்டம் பிரிந்து பிரிந்து பல அணுக்களின் பிழம்பாகத் திரண்டதில் ஒரு சில அணுக்கள்