பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்து மாத விந்தை

45

கருப்பையின் சுவர்களிலுள்ள தசை நார்கள் சுருங்கத் தொடங்குகின்றன. வயிற்றிலுள்ள தசை நார்களும் பிறவும் இவற்றிற்கு ஒரளவு உதவி செய்கின்றன.

அதனால் குழந்தை யோனியின் வழியாக வெளியே வருகிறது. முதலில் பனிக்குடம் உடைந்து அதிலுள்ள நீர் வெளிப்படும். அதனால் பிரசவம் ஒரளவு எளிதாகிறது.

பிரசவ வேதனை என்று சொல்லுகிறோம். குழந்தையின் பிரசவத்தின்போது தாய்க்கு வேதனைதான். குழந்தையின் சிரிப்பும், அறிவும், நன்றியும், பக்தியும்தான் பின்னால் அவளுக்கு இவ்வேதனைக்கு ஈடு செய்ய வேண்டும். குழந்தை வெளியில் வருவதற் குள்ளேயே பெரும்பாலும் கருக்குடைக்கும் கருப்பைக்கும் உள்ள தொடர்பு அற்றுப்போகும். இதுவும் பனிக்குடமும் குழந்தைக்குப் பின் நஞ்சாக வெளி வந்துவிடுகின்றன.

நஞ்சுக் கொடியின் மூலம் இனிக் குழந்தைக்கு உணவும், பிராண வாயும் செல்ல இயலாது. அதை இனிக் கத்தரித்துவிடலாம். கத்தரித்த இடத்தில் ரத்தம் பெருகாதபடி கட்டிவிட வேண்டும். நாளடைவில் இது வாடிப் பிரிந்துபோகும். இதன் மூலம் உணவு கொண்டதற்கு அறிகுறியாகக் கொப்பூழ் மட்டும் மறையாமல் என்றுமிருக்கிறது.

உலகத்திற்கு வந்ததும் குழந்தைக்கு எத்தனையோ புதிய வேலைகள் ஏற்படுகின்றன. பாவம்,