பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணா பெண்ணா

49

மேலே உள்ள ஒரு முதிரா விந்தணு முதலில் இரண்டாகப் பிரியும் போது ஒன்றில் எக்ஸ் நிறக்கோலும், மற்றொன்றில் ஒய் நிறக்கோலும் இருக்கின்றன. அவை இரட்டிக்கும்போதும் அம்மாதிரியே எக்ஸ் ஒய் நிறக்கோல்கள் தனித்தனியாக இருக்கின்றன. அவை மறூபடியும் இரண்டாகப் பிரிந்து நான்கு முதிர்ந்த விந்தணுக்களாகும்போது இரண்டில் எக்ஸ் நிறக்கோல்களும் மற்ற் இரண்டில் ஒய் நிறக்கோல்களும் இருக்கும். படம் ஆறையும் பார்க்க.  சொல்ல முடியும். அதாவது குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதற்குக் காரணமாக இருப்பவன் அதன் தந்தையென்பது மட்டும் நமக்குத் தெரிந்த உண்மை.

அது எப்படி என்று ஆராய்வோம். முதிராதவிந்தணுவிலும், அண்டத்திலும் 24 ஜோடி நிறக்கோல்கள் இருக்கின்றன என்று முன்பே தெரிந்திருக் கிறோம். விந்தணுவிலேயுள்ள 24 ஜோடிகளில் ஒரு ஜோடி மட்டுமே உருவத்திலே மாறுபட்டிருக்கிறது என்றும் தெரிந்திருக்கின்றோம். அந்த மாறுபட்ட ஜோடியிலுள்ள ஒன்றிற்கு எக்ஸ் நிறக்கோல் (X Chromosome) என்றும் மற்றொன்றிற்கு ஒய் நிறக்4