பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணா பெண்ணா

51

ஆண்பெண்

(அண்டத்திற்குள்ளே ஒரு விந்தணுத்தான் பாய்கிறது. அப்படிப் பாய்கிற விந்தணுவில் எக்ஸ் நிறக்கோலோ அல்லது ஒய் நிறக்கோலோதான் இருக்கும். எக்ஸ் நிறக்கோல் உள்ளது பாய்ந்தால் பூரிக்கும் அண்டத்தில் இரண்டு எக்ஸ் நிறக் கோல்கள் இருக்கும். அப்பொழுது குழந்தை பெண்ணாகும். ஒய் நிறக்கோல் உள்ளது பாய்ந்தால் பூரிக்கும் அண்டத்தில் எக்ஸ் ஒய் ஆகிய நிறக்கோல்கள் இருக்கும். அப்பொழுது பிறக்கும் குழந்தை ஆண். இவ்வாறு ஏற்படுவதைப் படம் விளக்குகிறது.)

தற்கும் பெண்ணாவதற்கும் காரணம். இது தெரியாமல் தாயைநொந்து கொள்வார் வெகுபேர். பாவம் தாய் என்ன செய்வாள்! கொஞ்சம் ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால் தந்தைதான் என்ன செய்வான்! அண்டம் பூரிக்கும் விதத்தைத் தன் விருப்பப்படி செய்ய அவனால்தான் ஆகுமா என்ன?