பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

“எல்லாம் அவருடன்தான் பேசவேண்டும். ரொம்பவும் ரகசிய சமாசாரம்” என்றும் அழுத்தலாகவும் கேலியாகவும் ஓங்கிய பாவனையில் பேசிவிட்டு வைத்துவிட்டான் எதிர்த் தரப்பு நபர்.

‘யார் அந்த ஆள் ? இதே குரலை நான் எப்போதோ, எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதே ? ...’

ஞானபண்டிதன் சிலையானான் !