இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124
விலேயே வேறு ஒன்றையும் பற்றி அலட்டிக்கொள்ளாமல், படத்தை அனுபவித்தான்.
படம் முடிந்தது.
தேசிய கீதமும் முடிந்தது.
தன்னே யாரே தோள் தொட்டு அழைப்பதாக அறிந்தான். திரும்பினான். “மிஸ்டர் ஞானபண்டிதன் ! நீ பலே ஆள் !... அன்னிக்கு டெலிபோனிலே என்னை நீ ஏமாத்திவிட்டதாத்தானே மனப்பால் குடிச்சிட்டிருக்கே ! அதுதான் தப்பு !....உன் குரல்னு புரிஞ்சுக்கிட்டுத்தான் நானும் பேசிக்கிட்டிருந்தேனாக்கும் !... நீயும் நானும் கூடிய சீக்கிரமே மீட் பண்ணுவோம்!.... வரட்டுமா? எனக்கு அவசரமான ஜோலி இருக்குது !...” என்று கொட்டி விட்டு, பிள்ளைப் பூச்சி போலச் சுவடு காட்டாமல் நழுவி விட்டான் !
தேள் கொட்டின உபாதை ஞானபண்டிதனுக்கல்லவா தெரியும் ?