பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

“இஸ் இட் ஸோ ?... மெய்யாகவா தம்பி ?” என்று சுவாரஸ்யமான பூரிப்புடன் கேட்டார் பெரியவர்.

“சத்தியமாக ! நீங்க தொழுகிற உங்க செந்தில் மீது ஆணையாக !...” என்று நீர் விலக்கிக் கூறினான் ஞானபண்டிதன்.

“அப்பனே! செந்தில்!” என்று சித்தபேதம் எய்தியவரைப் போலப் பல முறை கூவினார். பிறகு, தவமுனி போல மோனத்தில் முங்கினார். பிறகு கண் விழித்தார்.

அப்போது ரேடியோவில், “ரேடியோ சிலோன்...இப்போது திரைகானம்!” என்ற அறிவிப்பு சொல்லப்பட்டதும், வீறு கொண்டவராக சோமசேகர் எழுந்தவர், அடுத்த அரை நொடியில் மீண்டும் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். தமக்குத் தாமே சிரித்தார்! பிறகு விம்மினார் , பிறகு சமன் அடைந்தார்.

“தம்பி! ஒருவன் குற்றம் செய்துவிட்டால், பிற்பாடு அவன் செய்த குற்றத்தை உணர்ந்து வருந்தி மன்னிப்புக் கோரினால், தெய்வம் அவன் மன்னிப்புக்குச் செவி சாய்த்து விடுமா ?” என்று கேட்டார்.

"குற்றம் புரிந்தவன் செய்த தவற்றினை உணரும் பட்சத்தில் அவன் மன்னிப்பை பெற்றவனாகவே ஆவதாகத்தான் எல்லா மதங்களும் சொல்கின்றன !” என்றான் ஞானபண்டிதன்.

“எனக்கென்னவோ இப்படிப்பட்ட பொதுவான ஒரு கோட்பாட்டில் ஒரு நீதி இருப்பதாகத் தோன்றவில்லை. ஏன் தெரியுமா ? இப்படிப்பட்ட நிலை பரவினால், அப்புறம், ஆத்திரத்தில் ஒருவன் ஒரு கொலை செய்துவிட்டு, அப்பால் ஆத்திரம் தணிந்ததும், செய்த தவற்றை உணர்ந்து தெய்வத்திடமோ மற்றவரிடமோ மன்னிப்புக் கோரி, அவன் பாவத்துக்கு உடனடியான விமோசனம் செய்துகொண்டால், ஒவ்வொருவனுமே கொலை செய்யத் துணிந்துவிட மாட்டானா ? அவனுக்காகத் தான் மன்னிப்பு — பாவமன்னிப்பு ‘ரெடிமேட் ஸ்டாக்’ ஆக காத்திருக்கிறதே!...ஆனால், மன்னிப்பு விஷயத்திலே மனித மனமும் நீதி தேவனின் சட்டமும் இவற்றுக்கெல்லாம் புறம்பானவை. இவை எதனின்றும் எந்தக் குற்றவாளியும் எப்போதும் தப்பிவிட முடியாது !...சட்டத்தை ஒருவன் — சமுதாயத்துரோகி — ஏமாற்றினால், அவன் மனம் நித்த நித்தம் தரும் நகரவேதனையின் உபாதையை அவன் அனுபவிக்காமல்