பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


காதலுடன் பவனி

பூவழகியை அழைத்துக்கொண்டு, மவுண்ட் ரோடு, சைனா பஜார் ஆகிய இடங்களுக்கும் போனான் ஞானபண்டிதன். அவளுக்குப் பிடித்தமான துணிமணிகளை அவன் எடுத்தான். அவனுக்கும் எடுத்துக்கொண்டான். “நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்தால் சரிதான்,” என்று பொறுப்புக் கட்டி விடவே, குழலிக்கும் ஒரு ‘செட்’ துணிமணிகள் எடுத்தான்: மாப்பிள்ளை காளமேகத்துக்குத் தனக்கும் பொறுக்கியதைப் போலவே எடுத்தான்.

ஆக, வந்த வேலைகள் பூர்த்தி. புஹாரியில் சாயா சாப்பிட்டார்கள். இம்முறை அவன்தான் ‘பில்’ கொடுத்தான். அவள் அட்டி சொல்லக் காணோம். “எனக்கு இப்படி ஒரு நல்ல பாக்யம் உண்டாகும்னு கனவிலேகூட நினைக்கலேங்க! அந்தப் பாக்யத்தைக் கடவுள் நிலைக்கச் செய்ய வேணும். எனக்குக் கிடைச்ச அதிர்ஷ்டத்தை நான் அல்லும் பகலும் அனவரதமும் காப்பாத்திக்கிடுவேனுங்க! ...உங்க அன்பு பெரிசு; பாசம் பெரிசு; பண்பு பெரிசு; ஈரம் பெரிசுங்க !” என்றாள் பூவழகி.

நாளை கல்யாணம் செய்துகொள்ளப் போகும் கணவனிடம் அவனைப் பற்றிப் புகழ்வது அவளுக்கு லஜ்ஜையாகத்தான் இருந்தது. ஆனாலும், நன்றியின் மனம் அவள் மனத்தில் பட்டதைச் சொல்லும்படியே பணித்தது.

காதற்புறாவின் புகழுரைகள் அவனைப் போதை கொள்ளச் செய்தன.

அவை போதம் நிறைந்தவை அல்லவா ?

அந்திப் பொழுதில் ஆழித்தென்றலை அனுபவித்தவர்களாக இருவரும் நெடுநேரம் இருந்தார்கள். நாட்டின் பாதுகாப்புக்காக உண்டியல் குலுக்கி வந்தார்கள். அவனும்