பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தங்கமான பெண்ணாகவே இருக்காங்க. உங்களுக்கு ஏற்ற ஜோடிதான்!"' என்றாள் விஜயா.

சிவாஞானம் நிறைவு காட்டிப் புன்னகை காட்டினான்."'உன் கணவரும் அழகான பணக்காரர் ; நல்ல மனம் கொண்டவர். உனக்குத் தகுந்த ஜோடிதான் மிஸ்டர் சபேசன்! ” என்றான்.

சுறுக்கென்று என்னவோ கடித்த உணர்வு வரவே அவன் 'ஆல்ப'த்தை மூடினான். தரையைப் பார்த்தான். காலில் கட்டெறும்பு கடித்திருந்தது. விடுதலை பெற்றான். 'நான் விஜயாவைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டிருந்தால், எனக்கு இம் மாதிரியான துயரச் சோதனை ஏற்பட்டிருக்காதே ?' - இக் கேள்வி அவனுள் எரிமலையாகக் கனன்றது. .

"அத்தான் !”

யார் அழைத்த அழைப்பு அது ?

விஜயாவா?

அல்ல, மல்லிகா!...

கனன்று வெடித்த எரிமலையின் வாயில் அகப்பட்டுத் தவித்தான் சிவஞானம், "ஐயோ, நான் பாவி : மகாசுயநலக்காரன் !... மல்லிகா, என்னை மன்னிச்சிடு, ஷனப் பித்தம் ஷணச் சித்தம்னு சொல்லுவாங்க. அந்தக் கதையாக எனக்குப் பித்தம் ஏறி, சித்தம் தடுமாறிட்டுது என்ன மன்னிச்சிடு. என் விதியை நான் அனுபவிக்கிறேன். நீ என்ன செய்வாய் ! நீ என்னோட தெய்வம் ! எனக்கு ஒரு ஆணயை இட்டுப்பிட்டு நீ போய்விட்டாய் உன் குழந்தைக்கு ஒரு இரண்டாவது அம்மாவைச் சோதிச்சுப் பார்த்து நியமிக்க வேணும்னு எங்கிட்டே வரம் கேட்டிட்டுப் போய்விட்டாய் ... ஆளு, என் மனச்சாட்சிதான் என் சோதனைக்கு - உன் சோதனைக்கு-ஒத்து வர்ல்லே!.. . என்று புலம்பினான் அவன் .

அந்நேரம் பார்த்து ரிக்க்ஷாக்காரன் ராமையாவும் அவனது பேச்சும் அவனுள் நுழைந்துவிடவே, அவன் திக்குமுக்காடினுன் கண்களைத் திறந்து திறந்து மூடினான். கண்ணீர்தான் கட்டுடைத்துச் சிதறியது. வானத்தைப் பார்த்தான். அங்கு விண்மீன்கள்