பக்கம்:கற்சுவர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 07

அடுத்த கணமே பூபதியும் அவனுடைய நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட ஊர்ப்பிரமுகர்களும் மறிய லுக்குக் கூட்டம் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள்.

காலதாமதமின்றி உடனே அது நடந்தது. அந்தக் கூட்டத்தைப் பூபதியாலும், மற்றவர்களாலும் மிகக் குறுகிய நேரத்து க்குள்ளாகவே சேர்த்துவிட முடிந்தது. மறியலுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஏலம் எடுத்த சாமிநாதனே மிரண்டு போனார்.

'சிலைத் திருடர்கள் ஒழிக! சொந்த நாட்டுக் கலைப் பொருள்களை அந்நிய நாடுகளில் விற்றுச் சோரம் போகாதே!' என்ற கோஷங்களோடு லைப்ரரியிலும், கலைக்கூடத்திலும் இருந்து பண்டங்களை ஏற்றி எடுத்துச் செல்ல வந்த ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்ாரின் லாரி களை வழி மறித்தார்கள் அவர்கள். உள்ளூரின் எல்லா அரசியல் கட்சிகளும் இதில் பூபதியோடு ஒத்துழைத்தன. சிற்பங்களையும் ஒவியங்களையும், அரும் பொருள்களையும் அவர்கள் அரண்மனையின் தனிச் சொத்தாக மட்டும் நினைக்கவில்லை, மக்களின் பொதுச் சொத்தாக நினைத் தார்கள். அவை ஏலம் போவதை ஊரின் இழப்பாக, நாட்டின் இழப்பாக, அவர்கள் நினைத்தார்கள்.

"ஒரு தனிப்பட்ட நபருக்கு நான் கடன் கொடுத்திருக் கிறேன். அதைச் சரிக்கட்ட அந்தத் தனிப்பட்ட நபரின் தனிச் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் போட்டு என் கடனை அடைத்துக் கொள்கிறேன். இதில் நீங்கள் கோஷம் போடவோ மனம் குமுறவோ, ஊர்வலம் விடவோ என்ன இருக்கிறது?’ என்று சாமிநாதன் பூபதியையும் மற்றவர் களையும் பார்த்து ஆத்திரத்தோடு கேட்டார்.

'அரண்மனைக்குத் தனிச் சொத்து என்று எதுவும் கிடையாது. எல்லாம் மக்களின் வரிப்பணத்திலே வாங்கிச் சேர்த்ததுதான். இந்தச் சிலைகள், இந்த நூல் நிலையம், இந்தப் பொது ஓவியங்கள் எல்லாம் இவ்வூரில் இனி மக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/109&oldid=553081" இலிருந்து மீள்விக்கப்பட்டது