பக்கம்:கற்சுவர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 117.

ராஜா குணம் உங்களுக்குத் தெரியும். என் நிலைமையிலே நீங்க இருந்திருந்தா என்ன செய்ய முடியும்னு யோசனைப் பண்ணிப் பாருங்க...போதும்' என்று கோபப்படாமல் நிதானமாகப் பதில் கூறினார் பெரிய கருப்பன் சேர்வை. மாமாவால் பதில் பேச முடியவில்லை.

ஆவிதானிப்பட்டி நிலங்கள் சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஒழுங்கு செய்ய மேலும் இரண்டு நாட்கள் பிடித்தன. அந்த இரண்டு நாட்களில் சில பரம்பரைப் புலவர்களின் வீட்டுக்குச் சென்று பரண்களில் இருந்த அரிம் ஏட்டுச் சுவடிகளையும் பழம் பிரபந்தங்களையும் பார்த் தான் தனசேகரன். அந்த ஊரில் பழஞ்சுவடிகள், பிரபந்தங் கள், புலவர்களின் படங்கள், அவர்கள் வாழ்நாளில் உபயோகித்த பண்டங்கள் அடங்கிய பொருட்காட்சி ஒன்றை ஏற்படுத்துவது சம்பந்தமாகவும் சிலரைக் கலந்து பேசினான். கணக்கு வழக்கு, கடன், பற்று வரவு: விவகாரங்களில் சிறிதும் பட்டுக் கொள்ளாதவன் போல் ஒதுங்கி அவன் சுவடிகளையும் புலவர்களையும் காணப் போனது மாமாவுக்குப்பிடிக்கவில்லை. ஆனால் அதற்காக அவரால் அன்னைக் கடிந்து கொள்ளவோ கண்டிக்கவோ முடியவில்லை.

பிரியத்திற்குரிய செல்வ மருமகன் என்ற உறவு, ஒரு புறமும் வருங்காலத்தில் தன் சொத்த மகளை மணந்து கொள்ளப் போகிற மரியாதைக்குரிய மாப்பிள்ளை என்ற வருங்கால உறவு ஒருபுறமுமாக அவரைப் பற்றிக்கொண்டு. தனசேக்ரனை ஒரு சிறிதும்கண்டிக்க முடியாமல் அவரைத் தடுத்துவிட்டன.

ஆவிதானிப்பட்டி வேலைகள் முடிந்ததும் அவர்கள் மூவரும் சமஸ்தானத்தின் தலைநகருக்குத் திரும்பி விட் டார்கள். தலைநகரில் நிறைய வேலைகள் அரைகுறையாக, இருந்தன. அரண்மனைக் கரு வூ லத் தைத் திறந்து

க-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/119&oldid=553091" இலிருந்து மீள்விக்கப்பட்டது