பக்கம்:கற்சுவர்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 181'

டாவது மாடியில் ஒவியங்களையும், மூன்றாவது மாடியில் சுவடிகள், அச்சிட்ட புத்தகங்கள் என்று இரு விரிவுகள் அடங்கிய நூல் நிலையத்தையும் குடியேற்றுவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. - * - - - . . . . நூல் நிலையமும், சுவடிகளும் வேண்டுமானால் இருக்கட்டும், மற்றவற்றை நல்ல விலைக்கு விற்றால் ஏதாவது தொழிலில் முதலீடு செய்ய வசதியாயிருக்கும். மியூவியத்துக்கு டிக்கெட் வைத்தால் கூட உன்னுடைய முதலீட்டுக்கு வட்டியே கட்டாது." - -

"நான் சொல்றதைச் சொல்லியாச்சு...அப்புறம் உன் இஷ்டப்படி செய்' என்று மாமா குறுக்கிட்டுச் சொன் னத்ைத் தனசேகரன் ஏற்கவில்லை. உறுதியாக மறுத்துப் பதில் சொல்லி விட்டான். - - - ‘. . . . . . . . . . . . ." இந்த மாபெரும் காட்சிச் சாலையின் மூலம் எங்கள் பரம்பரை வரலாற்றின் பெருமை மிக்க பகுதிகளை நான் உலகறிய அறிவிக்கிறேன். இதில் முதலீடாகிற தொகை பயனுள்ளது ஆகும்' என்றான் அவன். மியூசியம் அமைப் பதற்குக் கால் லட்ச ரூபாய் மரச்சாமான், கண்ணாடி அலமாரிகள், விளக்கு, மின்விசிறி ஏற்பாடுகளுக்கே.ஆகும். என்று தெரிந்தது.

இவை தவிர ஆட்கள் சம்பளம்.வேறு இருந்தது. அரண் மனையின் மூன்று தளங்களையும் மியூசியம் அமைக்க விட்டு விட்ட தினத்தன்றே மாமாவும் தனசேகரனும் தங்கள் குடி யிருப்பை வசந்த மண்டபத்து விருந்தினர் விடுதிக்கு மாற்றிக். கொண்டார்கள், மியூசியம்-அம்ைப்பது என்ற வேலையில் தச்சர்களும் மேஸ்திரிகளுமாகப் பலர் இரவு பகலாய் ஈடு. பட்டிருந்தனர். - - - -

இது அநாவசியமான புதிய முதலீடு. பயன்தராத முதலீடு. புரொடக்டிவ் எக்ஸ்பெண்டிச்சர் இல்லே' என்றார் மாமா.

க-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/183&oldid=553156" இலிருந்து மீள்விக்கப்பட்டது