பக்கம்:கற்சுவர்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏8垒” கற்சுவர்கள்:

அம்மா! அப்படி நடத்துவதற்கும் மரியாதை செலுத்து வதற்கும் நீங்கள் தகுந்தவராகவே இருந்த போதிலும்கூட என்னால் அதைச் செய்ய முடியாமல் இருக்கிறது. காரணம் நமது பொது மக்கள், சுற்றியிருப்பவர்கள். எல்லாருமே. எதைப் பற்றியும் சுலபமாகக் கைகால்களை ஒட்ட வைத்துக் கதைகட்டி விடுவார்கள், தராதரம் பார்க்க மாட்டார்கள். உறவுகளின் உயர்வுகளைப் பார்க்க மாட் டார்கள். மனிதர்களின் பெருந்தன்மைகளைப் பார்க்க மாட்டார்கள். எதையும் பேசிவிடுவார்கள். ஊர் வாய் மிகவும் பொல்லாதது.'

நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. அது எனக்குப் புரிகிறது.

தனசேகரன் சொல்லியதை அந்த இளையராணி சகஜ மாக எடுத்துக் கொண்டதனால் நிலைமை சுலபமாயிற்று. மறுபடியும் வற்புறுத்தி அந்தச் செக் கையும் வீடு கட்டுகிற மனைக்கான பத்திரத்தையும் அவனிடமே திருப்பியளிக்க அவள் முயன்றாள். * --

அம்மா! இவற்றை நீங்கள் இப்படியெல்லாம் திருப்பி யளிக்கக் கூடாது. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்ற பழமொழி உங்களுக்கும் தெரிந்தி ருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் உடனடியாக வீடு கட்டிக் கொள்கிறீர்களோ இல்லையோ, பட்டாவையும் பத்திரத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். செக்கை ஏதாவது ஒரு பாங்கில் கணக்கு வைத்துப் போட்டுக் கொள் ளலாம். அது பின்னால் உங்கள் பையனின் மேற்படிப்புக்கு. பயன்படும். என்னிடம் இவற்றைத் திருப்பிக் கொடுத்து விடுவதன் மூலம் நீங்கள் யாருக்காகவும் எந்தவிதமான தியாகத்தையும் செய்துவிடவில்லை என்பதை உணருங்கள். வேறு எங்கும் போக விரும்பாத பட்சத்தில் தொடர்ந்து தாங்கள் இங்கேயே குருக்கள் வீட்டில் இருக்கலாம். ஆனால், அடிக்கடி என்னைக் கூப்பிட்டனுப்பவோ, அல்லது தேடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/186&oldid=553159" இலிருந்து மீள்விக்கப்பட்டது