பக்கம்:கற்சுவர்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 85

வந்து சத்திக்கவோ முயலாதீர்கள். இருவர் நன்மைக் காகவுமே இதை நான் சொல்கிறேன்.

தனசேகரன் இதைச் சொல்வி விடைபெற்றுக்கொண்டு மறுபடி கோவிலுக்கு வந்து குருக்களிடமும் தகவல் கூறி விட்டு வசந்த மண்டபத்து மாளிகைக்கு வந்தான். அவன் உள்ளே துழைந்த கோது. மாளிகை முகப்பில் மாமா குறுக்கும் நெடுக்கு மாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததுமே அவர் உடனடியாகக் கேட்டார்:

"ஏன் தம்பி? உன்னைத்தானே? ஷா அண்ட் படேல் என்ஜீனியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்காரனுக்கு நீ ஏதாவது அணைக்கட்டுக்குக் கல் சப்ளை பண்றதாகச் சொல்லியிருந்தியா? இங்கே பக்கத்திலே நூறு மைல் தொலைவிலேயே ஏதோ அணை கட்டறாங்களாமில்லே! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னே அவுங்க இங்கே ஃபோன். பண்ணினாங்க. கல் ைலப் பார்க்கறதுக்கு தாளைக்கு என்ஜீனியரோட வர்றாங்களாம். தயாரா இருக்கச் சொன்னாங்க. ஆமாம் எந்தக் கல்லை. அவங் களுக்கு விற்கப்போறே நீ? யாரையும் கலந்துக்காமே நீ பாட்டுக்கு அவங்களோட பேசிட்டியே சமயத்திலே -உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலேப்பா?’ . . . . .

நாளைக் காலையிலேதானே வரேன்னாங்க? வரட்டுமா!' . . . . . .

"நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலியே? எந்தக் கல்லை. அவங்களுக்குக் கொடுக்கப்போறே? அனை கட்டறத்துக்குக் கல் சப்ளைப் பண்றதுன்னா ரெண்டு சின்ன நிலையை உடைச்சாக்கூடப் போதாதே அப்பா?

"இந்த அரண்மனையைச் சுற்றி இருக்கிற கல் மதில் சுவர்கள் இரண்டு மலைகளைவிட அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன் மாமா!'

சரி அப்படியே இருக்கும்னு வச்சுக்குவோம். அரண் மன்ன மதிலுக்கும் அணைக்கட்டுக்கும் என்னப்பா சம்பந்தம்?" . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/187&oldid=553161" இலிருந்து மீள்விக்கப்பட்டது