பக்கம்:கற்சுவர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 岔球

யின் பெரிய மதில்களுக்குள்ளே இருந்த கடன் பத்திர நகல் களும், கடைகளின் நினைவூட்டும் கடிதங்களும் ஏராளமாக இருந்தன. பல செலவுகளைச் சமாளிப்பதற்கே தனசேகர னும், மாமாவும் வந்த பின்பு அவர்களைக் கேட்டுத்தான் வழி செய்யவேண்டும் என்று பெரிய கருப்பன் சேர்வை காத்துக் கொண்டிருந்தார். வந்ததும் வராததுமாகத் தனசேகரனிடமும் அவனுடைய தாய்வழி மாமனிடமும் அரண்மனை ஏறக்குறையத் திவாலான நில்ைமையில் இருப்பதைச் சொல்வதற்கு நேர்கிறதே என்பதை எண்ணிய போது காரியஸ்தரின் மனதுக்குக் கஷ்டமாகவும் தயக்கமாக வும்தான் இருந்தது. இன்று இந்த அரண்மனை இப்படிப் பண வறட்சியில் சிக்கியதற்குக் காலஞ்சென்ற மகாராஜா வும், அவருடைய துர்ப்போதனையாளர்களும்தான் முழுக்க முழுக்கக் காரணமே ஒழியத் தனசேகரன் காரணமில்லை. இந்த விஷயத்தில் அவன் மேல் அப்பழுக்குச் சொல்ல முடியாது என்பது எல்லாம் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கு நன்கு தெரிந்துதான் இருந்தது. ஒருவேளை தனசேகரன் மலேசியாவுக்குப் புறப்பட்டுப் போகாமல் இங்கேயே உடனிருந்து பெரிய மகாராஜாவையும், அரண் மனைச் செலவுகளையும் கட்டுப்படுத்திக் கண்காணித்திருந் தால் இவ்வள்வு மோசமாகி இருக்காதோ என்னவோ என்று கூடக் காரியஸ்தருக்குத் தோன்றியது. தனசேகரனுக்கு வீண் டாம்பீகமும், ஆட்ம்ப்ரச் செலவுகள்ையும் பிடிக்காது என்பது காரியஸ்தருக்குத் .ெ த ரி யு. ம். தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடே அதில்தான் ஆரம்பமாகி முற்றியது என்றுகூட அவர்அறிந்திருந்தார். சமஸ்தானாதி பதியின் மூத்த மகன். இளையராஜா என்றெல்லாம் ப்ேர்கள் தடபுடலாக இருந்த போதிலும் தனசேகரன் மல்ேசியா புறப்படுவதற்கு முந்திய தினம் வரை இரயிலில் சாதர்ர்ண இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்து கொண் டிருந்தான். பீம்நாதபுரம் ஊருக்குள் க்டை விதிக்கோ,

க-2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/23&oldid=552996" இலிருந்து மீள்விக்கப்பட்டது