பக்கம்:கற்சுவர்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23 I

உள்ளத்துக் கற்சுவர்களாகிய இறுமாப்பு ஜம்பங்களையும் நீக்கினேன். ஊர் ஒற்றுமையை இனி நீங்களெல்லாரும் சேர்ந்துதான் பாதுகாக்க' வேண்டும். திருட்டும் காவலும் இல்லாத புதிய சமூகம் ஒன்று நம்மிடையே உருவாக வேண்டும். அந்தஸ்து வாழ்க்கைத் தரங்களால் டிக்க்ள் பிளவுபடாத சமத்துவம் வேண்டும். இப்போது என் மாமா வின் தோட்டத் தொழிலை உடனிருந்து கவனிப்பதற்க்ாக நான் மலேசியாவுக்குச் சென்றாலும் விரைவில் இங்கேதான் திரும்பி வருவேன். இப்போது நான் சில மாதங்கள் அங்கே போவதுகூட நீங்கள் சமஸ்தானம், அரசர். அரச குடும்பம் என்ற வார்த்தைகளையும், உறவுகளையும் விரைந்து, மறக்க வேண்டும் என்பதற்காகத்தான்! நான் இங்கிருந்து இதே இடத்தில் வசிக்கத் தொடங்கினால் நீங்கள் பழைய வழக்கத்தை விட முடியாமல் மறுபடியும் சமஸ்தான ம்ரியாதைகளை எனக்குச் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். உங்களுக்கு அதெல்லாம் மறக்கவேண்டும் என்பதற்காகவே நான் சில காலம் இங்கிருந்து தொலைவில் சென்று வசிக்க எண்ணுகிறேன். எனக்கும், என் மனைவிக்கும். மாமர் வுக்கும் நீங்கள் இப்போது தற்காலிகமாக விடைகொடுக்க் வேண்டும்' என்றான் தனசேகரன். -

அந்த வேண்டுகோளும் விடைபெறுதலும் மிகமிக உருக்கமாக இருந்தன. காரியஸ்தர் பெரிய கருப்பண். சேர்வுை, மாமா தங்கபாண்டியன் எல்லாரும் அப்போது: -உடனிருந்தார்கள், ஒரு பத்திரிகை நிருபர் ன்.ழுந்திருந்து " அரண்மனையையும் ஊரையும் பிரித்த கற்சுவர்கள்ை நீக்கி விட்டீர்கள். இனி நீங்கள் இங்கேயே தங்கி இஊருக்கு நன்மைகள் செய்ய வேண்டாமா? மாமன் மகளைக் கட்டித்த கொண்டு அவரோடு மலேசியாவுக்கு விமானம் ஏறிப் போகப் பார்ப்பது என்ன நியாயம்?' என்று கேட்டார்.

'நான் எங்கும் ஒடிப்போகப் போவதில்லை. திருமண் வரவேற்புக்கு அங்கே அழைக்கின்றார் மாம்ாபோய்விட்டுச் சில மாதங்கள் கழித்து நானும் என் மனைவியும் இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/233&oldid=553210" இலிருந்து மீள்விக்கப்பட்டது