பக்கம்:கற்சுவர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2?

யுள்ள ஆள் சிக்கறானா இல்லியான்னு தேடிக்கிட்டுத்தான் இருப்பான். கெட்டுப் போகிறவன் மேலே கொஞ்சங்கூடக்

கோபிக்காம கெடுக்கிறவனைக் கட்டிவச்சு கதைக்கம்

போறேன்கிறது என்ன நியாயம்?"

அது : தம்பி ஆனால் கெட்டுப்போனவருதர்ன் இப்போ உலகத்தை விட்டே புறப்பட்டுப் போயிட்டாரே? அவரை இனிமே என்னா செய்யமுடியும்?" -

அவரு காலம் மு. டி.ய ற அவரை அவர் ៥, சொல்லியும் திருந்தத் தயாராயில்லே. நீங்க கூடத்தான் எவ்வளவோ சொன்னிங்க, மீதமிருக்கிறதைக் கன்ஸா லிடேட் பண்ணி ஊட்டியிலியோ, கொடைக்கானலிலேயோ அல்லது மைசூர் ஸ்டேட்ல சிக்மகலூரிலேயோ எஸ்டேட் வாங்கிப் போடலாம்னிங்க, அவரு எங்கே கேட்டாரு? சமஸ்தானம், சமஸ்தானம்னு ராஜாப்பட்டம் போட்டு அழைக்கிற சோம்பேறிகளை எல்லாம் நம்பியே குட்டிச்

சுவராப் போனாரு!" . . &

"அதுமட்டுமில்லே! நான் எவ்வளவோ தலையிலே அடிச்சுக்கிட்டேன். உங்க காலம் மாதிரி எல்ாைம் இனிமே எதிர் காலம் இருக்காது. அந்தப்புரத்திலே மந்தை மாதிரி இளையராணிங்கங்கற பேர்ல அடைச்சுப் போட்டிருக்கிற பொம்பளைங்களை வெளியே பத்தி விட்டுடுங்க. இல்லாட்டி அவங்க மக்கள். பேரன், பேத்திகள் எல்லாரையும் கட்டி மேய்ச்சுப் படிக்க வச்சுத் துணிமணி வாங்கிக் குடுக்க இந்த அரண்மனையைப் போலப் பத்துப் அரண்மனையை வித்தாக் கூடக் காணாதுன்னேன், கேட்கலை. இப்போ அவங்களையும் அவங்க வம்சாவளிங்களையும் பத்தி விடறதுக்கும் துரத்தறதுக்கும் வீணாகச் சின்னப் பையன் நீ சங்கடப்படனும்.’’ . . r

"நாம எங்கே அவங்களைத் துரத்திவிடறது? அவங்க நம்மைத் துரத்திவிடாமே இருக்கனுமேங்கறதுதான் மாமா இப்போ என் கவலை?" என்றான். தனசேகரன். கார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/29&oldid=553001" இலிருந்து மீள்விக்கப்பட்டது