பக்கம்:கற்சுவர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பர்ர்த்தசாரதி as

மாமா.பேச்சை முடிப்பதற்குள் அரண்மனைக் காவல் காரன் ஒருவன் வசந்த மண்டபத்துச் சாவியோடு வந்து கதவ்ைத் திறந்துவிட்டான். - - - -

"வேறே ஏதாச்சும் வேனுங்களா?" - "ஒண்னும் வேண்டாம்ப்பா குடிக்கத் தண்ணி மீட்டும் கொஞ்சம் க்ோண்டாந்து வை.ப்ோதும்.' - - - - - - காவல்காரன் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சொல்லிக் கொண்டு போன்ான்.

அப்புறம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. துங்கிவிட்டார்கள். - -

விடிகாலை ஐந்து மணிக்குக் காரியஸ்தர் வந்து அவர் களை எழுப்பினார். ஒரு பெரிய பிளாஸ்க் நிறையக் கள்ளிச் சொட்டாக அருமையான காபியும் கொண்டு வந்திருந்தார். -

எத்தனை மணியாகுமோ என்னவோ, அங்கே ராஜ ராஜேஸ்வரி விலாச்த்துக்கு வந்துட்டீங்கன்னர் அப்புறம் சாப்பிட ஒண்னும் கிடையாது. அதான் அரண்மண்ை வாசல்லே இருக்கிற அம்பிகா பவன் ஹோட்டல் ஐயரு கிட்டச் சின்னராஜாவுக்குன்னு ஸ்பெஷலர்'ச் சொல்லி வாங்கியாந்துட்டேன்." - . . .

மாமாவும் தனசேகரனும் அந்த அதிகாலையில் காபிய்ை எதிர்பார்க்கவில்லை என்றாலும் மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார்கள். பல்விளக்கி முகங்கழுவிக்கொண்டு இரு வரும் காபியருந்தி முடிக்கவும் டிரைவர் ஆவுடையப்பன் வசந்த மண்டபத்து வாசலில் சர்ரென்று காரைக் கொண்டு வந்து நிறுத்தவும் சரியாயிருந்தது. 'ஏன் ய்யா பெரிய கருப்பன் சேர்வை இங்கே அரண்மனைக்குள்ளாரப் போறதுக்கும் வர்ரதுக்கும் கார் எதுக்கு? நடந்தே போங்க் கலாமே? என்று கேட்டார் மாமா. .. -

'இல்லிங்க. நான் ஒரு காரணத்தோடதான் சொல் றேன். அங்கங்கே ஆளுங்க நின்னுக்கிட்டும், உட்கார்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/45&oldid=553017" இலிருந்து மீள்விக்கப்பட்டது