பக்கம்:கற்சுவர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 87

சிறிது நேரத்திற்கெல்லாம் எடுப்பாகவும் மிடுக்காகவும் ஒஉடையணிந்த நடுத்தர வயது மனிதர் ஒரு வர் உள்ளே வந்து முகமலர்ந்து கைகூப்பினார்.

ஹைனெஸ்ஸை இவ்வளவு சீக்கிரமாச் சந்திக்கிற டாக் கியம் கிடைக்கும்னு இந்த ஏழை நினைக்கலே...' என்று பயன்மாக வணங்கிய அந்த நடுத்தர வயது மனிதர் நாலைந்து ஹைனெஸ், இரண்டு மூன்று யுவர் எக்ஸ்லென்ஸி எல்லாம் போட்டுப் பேசவே அதைக் கேட்டுப் பூபதி எரிச்சலடைந்தான். -

"ஐயாம் பூபதி ப்ளீஸ் ஸே மிஸ்டர் பூபதி.தட் இஸ் எனஃப்' என்று அவரைப் பதிலுக்கு மடக்கிக் கோபத் தோடு இரைந்தான் பூபதி.

"நான் ஒரு வாரத்துக்கு முன்னே பெரிய ராஜாவைப் பெங்களுர் ரேளிலே சந்திச்சுப் பேசற பாக்கியம் கிடைச்சுது,’’. - - -

"மிஸ்டர்!...உங்க பேரென்ன? சாமிநாதனா? சாமி நாதன்! இதோ பாருங்க. சுற்றி வளைக்காமே வந்த காரி யத்தை ஸ்ட்ரெயிட்டா சிம்பிளா எங்கிட்டச் சொல்லுங்க.. போதும். இப்ப இந்த இடம் சமஸ்தானமும் இல்லே. எங்கப்பா பெரிய ராஜாவும் இல்லே. நான் சின்ன ராஜா வும் இல்லே. எல்லோரையும் போல நாங்களும் சாதாரண ஜனங்கதான். இதில் மதில் சுவர், கோட்டை, நந்தவனம் இதை எல்லாம் விட்டுவிட்டு வேறே வீடு புதுசாக் கட்டறத் துக்கு வசதி இல்லாததாலேதான் இன்னும் நாங்க இதிலேயே குடி இருக்கோம். இதிலேயே தொடர்ந்து இருக் கிறதுனாலே நாங்க ராஜாக்கள் ஆயிடமாட்டோம். நாங்க ராஜாவா இருந்ததை நாங்களே மறக்க ஆசைப்படதப்போ நீங்க அதை நினைப்பு மூட்டிவிடlங்களே, அதிலே உங்களுக்கு என்ன அத்தினி சந்தோஷம்...?” -

'தப்பா நான் ஏதாவது பேசியிருந்தால் இளையராஜா இந்த ஏழையை மன்னிக்கணும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/89&oldid=553061" இலிருந்து மீள்விக்கப்பட்டது