பக்கம்:கற்சுவர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

நா. பார்த்தசாரதி 89.

மெம்பர்ஷிப் பில்களே மாசம் மூவாயிரம் ரூபாய்க்கு மேைே. வந்திடுது. ஸ்பென்சர் சுருட்டு, ஸ்காட்ச்விஸ்கி, ரேஸ்,

சீட்டாட்டம் எதையுமே விடமாட்டேங்கறாரு, இந்த

விட்டு வரவு செலவு நிர்வாகம் இப்போ என் தலையிலே விழுந்திருக்கு. மாசா மாசம் பணக் கஷ்டம் தாங்க முடியலே! சமஸ்தானத்துக்கோ வருமானமே இல்லை.

எதையெதையோ விற்று எப்படியெப்படியோ நான்

சமாளிக்கிறேன். அப்படியும் பட்ஜட் துண்டு விழுது.

எங்கப்பாவிலேயிருந்து இந்த மாளிகையிலே சின்னராணி கள் என்ற பேரிலும், இளைய ராணிகள் என்ற பேரிலும்,

ராஜகுமாரிகள் என்ற பேரிலும், ராஜகுமாரர்கள் என்ற

பேரிலும், சின்ன ராஜாக்கள் என்ற பேரிலும் அடைந்து கிடக்கிற யாருக்கும் இங்கே உள்ள அசல் வறுமைகள், சிரமங்கள் எதுவுமே தெரியாது. இன்னும் பழைய சமஸ் தான காலத்து மிதப்பிலேயே இருக்காங்க. யாருமே

ரியாலிட்டியை ஃபேஸ் பண்ண எப்பவுமே தயாராயில்லை.

வாழ்க்கைச் சிரமங்கள் தெரியாமல் எங்க வீட்டிலே இருக்

கிற ஒவ்வொருத்தரும், சீமநாதபுரம் ராஜா, சீமநாதபுரம்

யுவராஜா, சீமநாதபுரம் ராணி, சீமநாதபுரம் சின்னராணிங் களெல்லாம் தாங்களே கூப்பிட்டுக் கொண்டும், பிறரைக்

கூப்பிடச் சொல்வியும், எழுதியும், எழுதச் சொல்லியும், போலியாகப் பெருமைப்பட்டுக் கிட்டிருக்காங்க. சுதந்திர இந்தியாவில்-ஜமீன்களும், சமஸ்தானங்களும் இல்லாத .புதிய இந்தியாவில் நாம் வாழ்கிறோம் என்ற ஞாபகமோ

பிரக்ஞையோ அவர்களுக்கு இன்று ஒரு சிறிதும்

இல்லை. $ to

"அதெல்லாம் சரி இளையராஜா இப்போ நான்

'சொக் ல வந்தது என்னன்னு கேட்டா...'

'பார்த் தீங்களா? பார்த்திங்களா? மறுபடியும் இளைய

ராஜா தானா? நான் த்ான் என்னை அப்படிக் கூப்பிடாதீங்

கன்னு முதல்லேயே சொல்லிவிட்டேனே! கொஞ்சம் நான்

சொல்லப் போறதை நீங்க பொறுமையாகக் கேட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/91&oldid=553063" இலிருந்து மீள்விக்கப்பட்டது