பக்கம்:கற்சுவர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 6 கற்சுவர்கள்

நான் உடனே, அந்த வேலைக்காரியை நான் பார்த் .தால்தான் அவள் இங்கே வேலை பார்க்கிறவளா இல்லையா என்பது எனக்குத் தெரியும். முதல்ல்ே நான் அவளைப் பார்க்கணும். இப்பவே உங்களோட போலீஸ் ஸ்டேஷனுக்கு வரேன்'ன்ேன்.

'நீங்க வர வேண்டாம். நானே அவளை இங்கே கூட்டிக்கிட்டு வரச் சொல்றேன்"னு இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணினாரு. கால்மணி நேரத்துக் கெல்லாம் ஒரு கான்ஸ்டேபிள் அந்த வேலைக்காரியை இங்கே அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். அவளை நான் விசாரித்தேன் :

"ஏம்மா நீயா இந்த வெள்ளிப் பாத்திரத்தைக் கடைக்கு விற்கக் கொண்டு டோனியா? அல்லது இங்கே அரண்மனையிலே இருந்தே உன் மூலம் யார்ாவது விற்கக் கொடுத்தனுப்பினாங்களா? உள்ளதைச் சொல்லிவிடு."

அவள் பதில் சொல்லத் தயங்கினாள். கண்களைக் கசக்கிக் கொண்டு அழுதாள். நான் பொறுமை இழக்காமல் அவளை மேலும் தூண்டினேன்.

'சொல்லும்மா! பயப்படாதே. என்னாலே உனக்கு ஒரு கெடுதலும் வராது.”

மீண்டும் அவள் தயங்கினாள். நான் அவளிடமிருந்து எப்படியாவது நிஜத்தை வரவழைத்து விடலாமென்று முயன்று கொண்டிருந்தேன். கடைசியில் சிறிதுநேரக் கண்ணிர் அழுகை பாசாங்குகளுக்கிடையே அவள் உண்மை யைக் கூறினாள்,

நான் ஒரு பாவமும் செய்யலிங்க. என் மேலே எந்தத் தப்பும் கிடையாது. சோப்பு. ஷாம்பு, ப்பேஸ் பவுடர், ஹேர் ஆயில் எல்லாம் வாங்கப் பணம் இல்லேன்னு சின்ன ராணி பத்மாம்பாள்தான் இதைக் கொண்டுபோய் வெள்ளிக் கடையிலே நிறுத்துப் போட்டு வரச் சொன்னாங்க. நீங்க இதை ராணிக்கிட்டச் சொல்லி என்னைக் காட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/98&oldid=553070" இலிருந்து மீள்விக்கப்பட்டது