பக்கம்:கற்சுவர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 97

கொடுத்திங்கன்னாக் கொலை விழும் அல்லது என் வேலை போயிடும்'லு கதறினாள் அந்த வேலைக்காரி. நான் அவளைச் சமாதானப்படுத்தி அவள் வேலைக்கு ஒர் ஆபத்தும் வராதென்று ஆறுதல் கூறிவிட்டு, இதில் திருட்டு ஒன்றுமில்லை. குடும்ப விஷயம். போலீஸ் தலையீடு அவசிய மில்லேன்னு நினைக்கிறேன்" என்று இன் ஸ்பெக்டரை நோக்கிக் கூறினேன். நான் கூறியதை இன்ஸ்பெக்டர் ஏற்றுக் கொண்டார். இன்ஸ்பெக்டரி என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டுப் போய்சி சேர்ந்தார். வேலைக்காரியைக் காப்பாற்றுவதற்காக நானே வெள்ளிப் பாத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டு சின்ன ராணிக்காகச் சோப்பு, சீப்பு, ஹேர் ஆயில், ஷாம்பு எல்லாம் வாங்க அவளிடம் என் கையிலிருந்து ரூபாய் கொடுத்தனுப்பினேன்.

"இதையெல்லாம் எதுக்குச் சொல்ல வந்தேன்னா ராயல் ஃபேமிலி அது இதுன்னு எங்க மேலே உங்களைப் போலொத்த வங்க வச்சிக்கிட்டிருக்கிற வீண் பிரமையை எல்லாம் இனிமேலாவது நீங்க விட்டுடனும். இனிமே எல்லோரையும் போல நாங்களும் சாதாரண மனுஷங்க தான், எங்களுக்கும் ஏழைமையும், தேவைகளும், வறுமை களும் உண்டு. அர்த்தமுள்ள வறுமைகளும் உண்டு. ப்பேஸ் பவுடருக்காக வெள்ளிப் பாத்திரத்தை விற்கிற மாதிரி அர்த்தமில்லாத வறுமைகளும் உண்டு. அதை எல்லாம் இனி மேலாவது உங்களை மாதிரி ஆட்கள் தெரிஞ்சுக்கணும்.'

"ஐ ட்டு ரியலைஸ் இட் யுவர் எக்ஸ்லென்ஸி." "பார்த்தீங்களா? பார்த்தீங்களா? இந்த யுவர் எக்ஸ் லென்ஸி’தானே வேணாங்கறேன்.'

'சரி இனிமேல் அதெல்லாம் சொல்லலே, நீங்களே பிரியப்படலேங்கறபோது வீணா அதெல்லாம் எதுக்கு? அரண்மனையிலே இது மாதிரிப் பணக்கஷ்டங்கள் சிரமங் கள் எல்லாம் இருக்குன்னு ஜாடைமாடையா. எனக்கே தெரிஞ்சதுனாலேதான் அந்த பிரஞ்சுக்காரனோட ஆஃபரை ஒத்துக்கலாமான்னு உங்ககிட்டக் கேட்க வந்திருக்கிறேன்.'"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/99&oldid=553071" இலிருந்து மீள்விக்கப்பட்டது