பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


தில் கூழ்பெற்று உண்கின்றது. கூழ் ஒழுகும் நிலையைப்பார்க்க கலத்தைக் கவிழ்த்துப் பார்க்கின்றது! கூழெல்லாம் கொட்டிப்போகிறது!

பொல்லா ஓட்டைக் கலத்துக்கூழ்
புறத்தே ஒழுக மறித்துப்பார்த்து
எல்லசங் கவிழ்த்துத் திகைத்திருக்கும்
இழுதைப் பேய்க்கு வாரிரே[1]

[பொல்லா-கெட்ட மறித்துப்பார்த்து தலைகீழாகத்

திருப்பி:இழுதை-அறிவற்ற]

என்பது கவிஞரின் சொல்லோவியம். ஒரு பேய்க்குப் பாத்திரம் கிடைக்கவில்லை. அது போர்க்களத்தில் இறந்துகிடந்த யானைத்துதிக்கையின் ஒருதுணியை பல்லின்மேல் நிறுத்திக்கொண்டு மறுபக்கத்தில் கூழை வார்க்கும்படி வேண்டி நிற்கின்றது.

துதிக்கைத் துணியைப் பல்லின்மேல்
செவ்வே நிறுத்தித் துதிக்கையின்
நுதிக்கே கூழை வாரென்னும்
தோக்கப்பேய்க்கு வாரீரே[2]

[துணி-துண்டம்,செவ்வே-செவ்வையாய், நுதி.நுனி)

என்பது இப்பேயின் நிலையைக்காட்டும் சொற் சித்திரம்.

அழுகைச் சுவை

போர்க்களத்தில் காணும் நிகழ்ச்சிகள் பல அழுகைச்சுவை பயக்கவல்லவை துன்பத்திலும் இன்பத்தைக் காணுவதுதான் ஆன்மாவை உணர்வது என்று அறிஞர் கூறுவர். இச்சுவையை மேல்


  1. தாழிசை-572
  2. தாழிசைக் 273