பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


மருட்கைச் சுவை

இயற்கைக்கு மாறுபாடாக எதையாகிலும் கண்ணுற்றால் வியப்புத் தோன்றுகிறது. நகையினை வினைவிப்பவை வேண்டாதவையாக இருக்கும் ; வியப்பினை நல்குபவை அப்படியன்று ; விரும்பும் வண்ணமேயிருக்கும். நாம் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்து விட்டாலும் வியப்பெய்துகின்றோம். இமயத்திலிருந்து மீண்ட முதுபேய் காளியின் முன்பு காட்டிய தான் கற்ற இந்திர சாலங்கள் பலவும் நம்மை வியப்புச் சுவையில் ஆழ்த்துகின்றன; காட்சிகளையெல்லாம் நேரில் காண்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்குகின்றன. ஒரு கையில் யானையின் துதிக்கையை வைத்து அதை மறு கையில் மாற்றும்பொழுது யானைத் தலையாகிறதைக் காட்டுகிறது.

ஏற தின்னிருதி ருக்கண் வைத்தருள்செய்
இக்கை யிற்சிலது திக்கைபார்!
மாறி விக்கையில ழைக்க மற்றவெம
தக்க ரித்தலைக ளானபார்![1]

[ஏற-நேரே; மதக்கரி-மதயானை]

என்ற தாழிசையில் அக்காட்சி சித்திரிக்கப் பெறுகின்றது. யானைத் தலையுடன் குறையுடலையும் காட்டிய இந்திர சாலத்தை,

இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர
நீர்கு டித்துருமி டித்தெனக்
கொக்க ரித்தலகை சுற்ற மற்றிவைகு
றைத்த லைப்பிணமி தப்பபார்![2]

[கரி-யானை; உதிரநீர்-குருதி; உரும்-இடி; கொக்கரித் தல்-இரைச்சல் இடல்; அலகை-பேய்]

  1. தாழிசை-162
  2. தாழிசை-163