பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருணாகரத் தொண்டைமான்

119


கருணாகரன் ஆண்ட வண்டை என்ற ஊர் தொண்டைநாட்டிலுள்ள தென்றும், சென்னைக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில் புகைவண்டிப் பாதையில் ஒரு நிலையமாக அமைந்துள்ள வண்டலூரே அவ்வண்டை என்றும் காலஞ்சென்ற திரு. வி. கனகசபைப்பிள்ளை, டாக்டர் ஹீல்ஷ் துரை போன்ற வரலாற்று அறிஞர்கள் கருதினர். அவர்கள் அங்ஙனம் கருதினமைக்குக் காரணம், கருணாகரன் பல்லவ மரபினனாய்த் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றிருப்பதும், தொண்டைமண்டல சதக நூலார் அவனைத் தொண்டை நாட்டினனாகப் பாடியுள்ளதுமாகும்.[1]

ஆனால், திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் அவ்வண்டை என்ற ஊர் தொண்டை நாட்டிலுள்ள வண்டலூர் அல்லவென்றும்,

அது சோழநாட்டிலுள்ள ஓர் ஊர் என்றும், அந்த ஊர் கல்வெட்டுக்களில் 'வண்டாழஞ்சேரி' என்று வழங்குகிற தென்றும், அந்த வண்டாழஞ் சேரியே இப்பொழுது வண்டுவாஞ்சேரி என மருவி வழங்குகிறது என்றும் கருதுகிறார்கள். அதற்கு ஆதாரமாக அவர் குறிப்பிடும் கல்வெட்டு:


  1. பண்டையொர் நாளையில் ஒரேழ்
    கலிங்கப் பரணிகொண்டு
    செண்டையும் மேருவில் தீட்டுவித்
    தோன்கழல் செம்பியன் சேய்
    தொண்டநன் னாடு புரக்கின்ற
    கோனந்தி தோன்றல் எங்கள்
    வண்டையர் கோணங் கருணா
    கரன்தொண்டை மண்டலமே.

                —தொண்டைமண்டல சதகம்.செய், 93.