பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குலோத்துங்கன்

137


காட்டி மறுத்திருக்கிருர்கள்.[1] அங்ஙனமே முதற் குலோத்துங்கன் தான் சோழநாட்டைக் கவர்ந்து கொள்ளும் பொருட்டு உள்நாட்டில் கலகம் திகழுமாறு செய்து அதில் அதிராசேந்திரனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்[2] கருதுவதையும் மறுத்து குலோத்துங்கனுக்கும் அதிராசேந்திரனுக்கும் எத்தகைய பகைமையும் இல்லை என்பதும் அவனால் இவ்வதிராசேந்திரன் கொல்லப்படவில்லை என்பதும நன்கு நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன.[3] அதிராசேந்திரனேப்பற்றியே கலிங்கத்துப்பரணி குறிப்பிடாததற்கும், வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியின் இரண்டடிகளும் 'புகழ் மாது விளங்கச் செயமாது விரும்ப' என்று தொடங்கும் இவ்வேந்தனுடைய மெய்க்கீர்த்தியும் கலந்து வரையப் பெற்றிருப்பதற்கும் காரணம் வீரராசேந்திரனுக்குப் பிறகு உரிமைப்படி சோழராஜ்யத்திற்கு அரசனாக்கப் பெற்றவன் குலோத்துங்கனே என்று உணர்த்துவதற்கேயாம் என்று திரு K. A. நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார்கள்.[4] சோழ ராஜ்யத்தின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் குலோத்துங்கன் தலைநகரிலில்லாது திக்விஜயம் புறப்பட்டதும், குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்ததும் அவனை வீழ்த்துவதற்கு ஆறாம் விக்கிரமாதித்தன் முயற்சி செய்ததும், அதிராசேந்திரனைப்பற்றிக் கலிங்கத்துப் பரணி குறிப்பிடாததும் அதிராசேந்


  1. பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி II பக்-252-237,
  2. Annual Report on Epigraphy for 1904, page 11
  3. பிற்காலச் சோழர் சரித்திரம். பகுதி. பக். 259-60; பகுதி-II பக். 11-12.
  4. The Colas (Second Edition) p. 294.