பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்

45


தணிக்கக் கூடியவள் அவள். அவளுடைய கடைக்கண் பார்வை படுவதால் சிவமெருமானுக்கு உண்டாகும் காம நோயைத் தன் இனிய சொற்களால் தணிவிப்பாள். உலகிலுள்ள மலைகளைக் காதணிகளாகவும் அணிவாள்; விரும்பினால் அவற்றைக் கோத்து இரத்தின மாலையாகவும் சூடுவாள். அந்த மலைகள் அவளுடைய கையில் அம்மானையாகவும் அமையும்; பந்துக்களாகவும் கூடும்; கழங்குகளாகவும் கொள்ளப்பெறும். அவள் விரும்பினால் என்னதான் ஆகாது?

தேவி வழிபாடு

தேவியை வழிபடுவோர் அவள் திருக்கோவிலைப் பெருக்கி பசுங்குருதி நீரைத் தெளித்து, கொழுப்பாகிய மலர்களைத் தூவி, பிணங்களைச் சுடும் சுடலையிலுள்ள விறகு விளக்குகளை எங்கும் ஏற்றி வைப்பர். அவளை வழிபடுவோரின் ஒலி கடலொலி போல் எங்கும் முழங்கும். இதனைக் கவிஞர்,

சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர்
      தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
பலியாக உறுப்பரிந்து தருதும் என்று
      பரவும் ஒலி கடல் ஒலிபோல் பாக்கு மாலோ[1]

[தறுகண்-அஞ்சாமை; பரவுதல்-துதித்தல்; பரக்கும் பரவும்]

என்று கூறுகிறார். பலவகை வாத்திய ஒலிகளை, ஒலிக்கும் வீரர்கள் தங்கள் விலா எலும்புகளைச் சமித்-


  1. தாழிசை -109