பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை ஊற்று

79


அமைந்திருப்பது இச்சிறப்பைப் பின்னும் மிகுவிக்கின்றது.

தன்மை நவிற்சி

உள்ளதை உள்ளவாறு கூறுதல் பெரும்பாலோருக்கு இயலும். அதை அழகு ஒழுகவும் இனிமையாகவும் எடுத்து இயம்புவது கவிஞன் ஒருவனுக்கே இயலும். சயங்கொண்டாரின் கவிதைகளில் இத்தகைய பண்பைக் காணலாம். பெண்ணொருத்தி துயிலெழும் நிலை மிக அழகான சொல்லோவியத்தால் தீட்டப் பெற்றிருக்கின்றது. காலையில் துயில் நீங்கி படுக்கையை விட்டெழுகின்றாள் ஒருத்தி. துயின்றபொழுது கூந்தல் அவிழ்ந்து கிடந்தது; ஆடை நெகிழ்ந்து நின்றது. எழுந்தவள் அவிழ்ந்து நின்ற கூந்தலை ஒருகையால் தாங்கியும் நெகிழ்ந்து நின்ற ஆடையை மற்றொரு கையால் பற்றியும் இரண்டோரடி எடுத்துவைத்து நடக்கின்றாள். துயில் நீங்கி எழுந்த நிலையிலும் அவள் முகம் மலர்ச்சியுற்றுக் காணப்படுகின்றது.

சொருகு கொந்தளகம் ஒருகைமேல் அலைய
       ஒருகை கீழ் அலைசெய் முகிலோடே
திருஅ னந்தலினும் முகம லர்ந்துவரு
       தெரிவை மீர்கடைகள் திறமினோ[1]

[கொந்து-பூங்கொத்து; அளகம்-கூந்தல்; அலைசெய்(காற்றால்) அசையும்; துகில்-ஆடை; அனந்தல்-தூக்கம்; தெரிவை-பெண்]

என்ற தாழிசையில் அக்காட்சி சித்திரித்திருப்பதைக் காண்க. இத்தாழிசையின் முதலடியின் கருத்து,


  1. தாழிசை -46