பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


'அகில்ஏந்து கூந்தல் ஒருகையில் ஏந்தி
அசைந்தொருகை
துகில் ஏந்தி'[1]

[அகில்-அகிற்புகை, துகில் ஆடை)

என்ற தஞ்சை வாணன் கோவை அடியிலும் அமைந்திருப்பது ஒப்புநோக்கி எண்ணி மகிழ்வதற் குரியது. மகளிரின் நடையைக் காட்டும் சொல் லோவியம் மிக இன்பம் பயப்பது.

சுரிகுழல் அசைவுற அசைவுறத்
துயிலெழும் மயிலென மயிலெனப்
பரிபுர ஒலிஎழ ஒலிஎழப்
பனிமொழி யவர்கடை திறமினோ[2]

[சுரிகுழல்-நெளிந்தகூந்தல் (Curling, hair): பரிபுரம்

கிண்கிணி]

என்ற தாழிசையில் அந்நடை காட்டப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்க. இன்னொரு இடத்தில் மகளிர் நடை கற்பனை நயம் தோன்றக் காட்டப் பெற்றுள்ளது.

உபய தனம் அசையில் ஒடியும் இடைநடையை
ஒழியும் ஒழியும்என ஒண்சிலம்பு
அபயம் அபயம்என அலற நடைபயிலும்
அரிவை மீர்கடைகள் திறமினோ[3]

[உபயம்-இரண்டு; தனம்-கொங்கை; இடை-இடுப்பு; ஒழியும்-விட்டொழியும், ஒண்சிலம்பு-ஒளிபொருந்திய சிலம்பு; அலற-ஒலிசெய்ய, அரிவை-பெண்]

நுண்ணிடையையுடைய ஒருத்தி கொங்கையின் பளுவைத் தாங்க முடியாது நடந்து வருகின்றாள். பளுவின் மிதியால் இடைமுறிந்து விடுமோ என்ற


  1. தஞ்சை வாணன் கோவை-செய் 27,
  2. தாழிசை-23
  3. நாழிசை-58