பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
84



பேரரசிற்கு அடங்கி அரசோச்சும், பெருநில வேந்தர்களும், குறுநில மன்னர்களும், மண்டலத் தலைவர்களும், தத்தம் திறைப்பொருள்களுடன், அரசவையின் கடைவாயிற்கண் காத்திருக்கின்றனர் என அறிவித்தான்; அவர்கள் அரசவை வருக எனக் குலோத்துங்கன் பணிக்க, வந்து வணங்கிய பின்னர்த் தாம் கொணர்ந்த வகை வகையான பொருள்களைக் குலோத்துங்கன் காண வரிசை வரிசையாக வைத்து நின்றார்கள் அவ்வேந்தர்கள். மணி ஆரங்களும், முத்தாரங்களும், நவமணிகோத்த ஏக வடங்களும், பொன் அணிகளும், பொன் முடிகளும், பொற்பெட்ட கங்களும், மணிகள் இழைத்த மகரக் குழைகளும், மகளிர் அணியும் நெற்றிப் பட்டங்களும், வேறு பல பொன்னணிகளும், நவமணிக் குவியல்களும், பொற் குவியல்களும் அரசவையில் உள்ளார் கண்ணும் கருத்தும் கூசும் வகையில் காட்சி அளித்தன. அம்மட்டோ! அவர் கள் அளித்த களிறுகள் கணக்கில; கடல் அலையெனத் தாவிக் காற்றென விரையும் குதிரைகள் கணக்கில; ஒட்டகங்களும், உயர்வகைப் பிடியானைகளும் பற்பல. திறைபெறும் அவ்வினை முடிவில், குலோத்துங்கன் திருமந்திர ஓலைநாயகத்தை நோக்கித் திறை தரா அரசர் எவரேனும் நம் ஆட்சிக் கீழ் உளரோ?” என்று வினவி னான்; ஒலைநாயகம் அரசனை வணங்கி, ஆம் அரசே! வடகலிங்க நாட்டுக் காவலன் அனந்தவன்மன், திறை தர இருமுறை வந்திலன்” என்று விட்ையளித்தான்.

அது கேட்டான் குலோத்துங்கன் கடுஞ்சினம் கொண் டான்; தன் அருகில் வீற்றிருக்கும் பெரும் படைத் தலைவன் கருணாகரத்தொண்டைமானை நோக்கிப் படைத்தலைவ! வடகலிங்கக் காவலன் வன்மை இல்லாதவன் ; அவன்மீது போர் தொடுப்பது நம் பேராண்மைக்கு இழுக்காகும்; ஆனால் நம் அடிபணிய மறுக்கும் அவனை வாளாவிடுவது அரச முறை ஆகாது. ஆகவே வடகலிங்கம் நோக்கி இன்றே புறப்படு; அவ்வடகலிங்கம், வலிய மலை