பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* is 6 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

கவிகளுக்கும் இருந்திருக்கிறது. சுந்தரகாண்டத்தின் பெயர்ப் பொருத்தம் இந்த நோக்கத்தோடு பார்க்கும் போது மந்திரசக்தி வாய்ந்த ஒன்றாகத் தோன்றுகிறது. மேலும் இராமாயணக் கதையையே முடித்துக் கொடுக்கின்ற அளவு பெருமை வாய்ந்த ஒரு பாத்திரமாக அனுமன் இக்காண்டத்திலேயே நேயர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றான்.

கடலைக் கடந்து செயலை முடித்துத் திருவடிதொழுது நற்செய்தி தரும் அனுமனின் முழுத்தொடர்பும் கொண்டே இக்காண்டத்தின் நிகழ்ச்சிகள் யாவும் நிகழ்கின்றன. இலங்கை நகரில் அவன் செய்யும் சாமர்த்தியமான போர்களில் எம்பெருமானிடம் அவனுக்கு உள்ள பக்தியின் ஆழம் வெளிப்படுகிறது. அற்புதம், பிரமை, இவைகளோடு கூடிய ஒருவிதமான பேரழகும் அந்தச் செயல்களில் கலந்திருக்கிறது. எனவே பலவகையாலும் புண்ணியமும் புனிதத்துவமும் பேரழகும் நிறைந்த ஒன்றாகும் தகுதி சுந்தரகாண்டத்திற்கே உரியது. சுந்தரகாண்டச் செய்யுட்களில் கம்பனின் அழகு முத்திரை பளிச்சென்று மின்னுகிறது. சொல்வளத்தோடு பொருட்செறிவும் பொருந்தியவையே அவ்வளவு செய்யுட்களும் இராமாயணக் காப்பியத்தைக் கம்பன் தமிழ்ப்படுத்தியதே ஒரு செளந்தரிய சிருஷ்டி சுந்தரகாண்டத்தின் பெரியவனப்பைக் காணும் போது அது மிகப்பெரிய உண்மையாக உயர்ந்துவிடுகிறது. படித்துப் படித்து வரமடைய வேண்டிய, "நினைத்தது கொடுக்கும் நிகரிலாத சக்தி” சுந்தரகாண்டத்திற்கு உண்டு.

குழந்தை உள்ளம்

இறை வன் படைத்த தூய்மை மாறாத உள்ளம் குழந்தை உள்ளம் அந்த உள்ளத்திற்கு உவமை தேட வேண்டுமானால் கடவுள் உள்ளந்தான் அதற்கு உவமையாக அமைய முடியும். பொய்யும் களவும் புகுந்து கலக்காத தெளிந்த உள்ளம் அது. நீரின் தண்மையையும், நெருப்பின் வெம்மையையும் அறியாத உள்ளம். அந்த இளைய உள்ளம் கோயிலிற் குடிபுகுத்தி வழிபடுதற்குரிய தெய்வத் தன்மை வாய்ந்தது. இது இன்னது, இதனால் இது நேரும் என்று பகுத்தறியும் ஆற்றல் அதற்கு இல்லையானாலும் படைப்புக் கடவுளின்