பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 14 கலித்தொகை பரிபாடல் காட்சிகள்

ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் தம்முள்ளே ஒத்த காதலினராய் இவ்வழியே செல்லக் கண்டதுண்டோ? என வினவுகிறாள்.

அதற்கு அவர்கள் கூறும் பதிலிலேயே பெற்ற உரிமையும் பயனும் எவ்வியல்பின என்பது நன்கு விளங்குகிறது! நின் மகளைப் பெற்ற உரிமை நினக்கு உண்டாயினும் அவள் பருவகாலத்தில் தன் காதலுக்குரிய ஆண்மகனொருவனுக்கே பயன்படுவாள். உரிமை உன்னுடையது, பயன் அவளுடையது. இத்தகைய வேறுபாடு தத்துவ ரீதியாகப் பொருந்தாத தொன்றன்று. இதோ சில தத்துவங்களைக்கூறி உரிமையும் பயனும் வேறுபடுவதை விளக்குகிறோம்.

சந்தனம் மலையிலே வளர்ந்த மரத்திலிருந்துதான் கிடைக்கிறது. ஆனால் அதன் குழம்பைப் பூசிக்கொள்வார்க்கன்றி உரிமை பெற்ற மலைக்கு அவை பயன் படுவன அல்ல. உன் மகளும் உனக்கு உரியளாயினும் அவள் காதலனுக்கே பயன்படுகிறாள். அழகிய வெண்முத்து நீரிலே பிறந்தாலும் கோத்து மாலையாக அணிபவர்க்கன்றி நீருக்கு அவை என்ன பயன்தர முடியும் உன் மகளுடைய பயனும் அப்படியே யாழிலே பிறக்கின்ற இன்னிசை கேட்போர்க்கு அன்றி யாழுக்கு என்ன பயனைத் தரமுடியும்? உன் மகளும் அப்படியே. ஆதலால் பெற்ற உரிமை கொண்டு நீ அவர்கள் காதலை விலக்க வேண்டாம். பயன் என்பதன் பொருத்தம் இதுதான்.

"பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாமென் செய்யும் சீர் கெழுவெண்முத்தம் நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் அணிபவர்க்கு அல்லாத என் செய்யும் ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கல்லதை

யாழுளே பிறப்பினும்