பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23 o'

தலைவனும் யானும் சத்தித்து முடிவிற் பிரித்தோம். அங்ங்னம் நான் பிரிந்துபோகும்போது அவன் திடீரென்று ஏதோ நினைத்தவன் போல, என்னைநோக்கி "நீ போகாதே நில்" லென்று கூறினான். நான் நின்றேன்.

அவன் என் அருகே வந்து எனது நெற்றியையும், முகத்தையும், தோளையும், கண்ணையும், சாயலையும், சொல்லையும், நோக்கி அவைகளுக்கு உரிய உவமைகளை எடுத்துரைக்க எண்ணி, "நினது நெற்றி பிறையை போலத் தேய்ந்தாயினும் கண்டார்க்கு வியப்பை யுண்ட்ாக் குதலி னாற் பிறையுமன்று. முகம் மதி போன்றதாயினும் களங்கமில்லையாதலினால் மதியுமன்று. தோள் மூங்கில் போன்றதாயினும் அம்மூங்கில்கள் போல இவை மலையிற் பிறத்தலின்மையின் அதுவுமன்று.

கண் பூப்போன்றதாயினும், அப்பூக்கள் சுனையில் பூத்தல் போல இவை சுனையிற் பூவாமையின் அதுவுமன்று. சாயல் இருந்தபடி இருத்தலின் மெத்தென நடக்கும் மயிலுமன்று. சொல்லுச் சொல்லுங் காற் றளருமாயினும் கூறியதே கூறாமையிற் கிளியையும் ஒத்தது. அன்று என்று அவ்விடத்திலே எனது அங்கங்களை யெல்லாம் பலபடப் பாராட்டினான். அவன் காதலின் மிகுதியினாலே பொய்யாகக் கூடப் புனைந்து உரைத்துவிட்டான். காதல்தானே அவனை அப்படிப் பாராட்டச் செய்கிறது என்று தலைவன் தன்னைப் பாராட்டியதாலும் தான் நாணழியாமையைத் தலைவி தோழியிடம் எடுத்துக் கூறுகிறாள்.கூறும் முறைமையே ஒரு திறமை.

"தில்லென நிறுத்தான் நிறுத்தே வந்து துதலும் முகனும்

தோளும் கண்ணும் இயலும் சொல்லும்

நோக்குபு நினை இ ஐதேயந் தன்று

பிறையும் அன்று மைதீர்ந்தன்று

மதியும் அன்று