பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 33 &

நெடியகரிய கூந்தலையுடைய பரத்தையரையும், சடைமுடி தரித்த முனிவரையும் இருபொருள் பட ஒரு தொடரிற்கூறித்

தலைவனை மருளவைக்கிறாள் தலைவி.

நகைச்சுவை நாடகம்

கலித்தொகை மருதத்தினுள் வரும் சுவைக்குரிய பகுதிகளில் இது சிறந்த ஒன்று. தன்னின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத காதலன் காதலிகளைப் பற்றியே கேட்ட நமக்கு ஒரு கூனிக்கும் காதல் தோன்றுவதை மருதனிளநாகனார் சித்தரிக்கிறார். குட்டையன் கேள்விக்குத் கூனி பதிலிருப்பதாகவும் இக்காட்சியை அமைத்து நயந்தருகிறார் புலவர். முதலிற் குட்டையன் கூனியை வேண்டுகிறான். "உன்னை நான்மார்புறத் தழுவுவேன் ஆயின் நின்னுடைய கூன் என்னைத் தடுக்கும். முதுகுப் பக்கமாகத் தழுவுவேனாயின் உனது தொங்கும் கூன் என்னை, அமுக்கும், ஆகையால் முதுகுப்பக்கம் நெருங்கக் கூடமாட்டேன். பக்கத்திலே வேண்டுமானால் சிறிது தழுவலாம். கொஞ்சம் என்னருகே வந்தால் பக்கத்திலே தழுவிப் பார்க்கிறேன்.

“கொடுமடாய

நின்னையான் புக்கு அகலம் புல்லின் நெஞ்சு

ஊன்றும் புறம்புல்லின் ஆக்குளுத்துப் புல்லலும்

ஆற்றேன் அருள் ஈமோ பக்கத்துப் புல்லல் சிறிது”

(கலித்தொகை : மருதம்)

(கொடு மடாய்-வளைந்த கூனியே, அகலம்-மார்பு, புல்லல்-தழுவுதல், ஈமோ-கொடு) -

கூனனுக்குச் சரியான பதிற்கொடுக்கிறாள் கூனி " போடா குறளா! கொப்பரையைக் காட்டிலும் குட்டையே! உழுந்தினைப் பார்த்தாலும் சிறிது உயரமென்று சொல்லலாம் நின்னை என்ன உயரமென்று சொல்லுவது? உழுந்தைக் காட்டிலும் குட்டையன் நீ உன்னைக் காட்டிலும் கூனியாகிய நான் எவ்வளவோ

க.கா.3