பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 70 கலித்தொகை பரிபாடல் காட்சிகள் 6. எமது விருப்பம்

"விருப்பெலாங் கடந்து வீடு நெறிதேடும் எமக்கும் ஒரு பெரிய அடங்காத பேராவல் உண்டு. அவிக்க அவிக்கப் பற்றும் அகன்ற காட்டெரிபோல எம்முள் பரவுகிறது அவ்விருப்பம். தோன்றி முடிந்ததும், இனித் தோன்றப் போவதும், இப்பொழுது தோன்றிக் கொண்டிருப்பதும் ஆகிய காலக் கூறுபாடுகளைக் கடந்து அக்காலங்களெல்லாம் தன் திருக்காலடி நிழலில் தங்க நிலை பெற்றிருக்கிறான் இறைவன். தன்னை ஏத்தும் அன்பர்க்கு இருவினை கழிய அருளும் இயல்பினன். அன்பர்கள் மேற்கொள்ளும் அன்பாகிய ஒரேவினை மேவுகின்ற உள்ளத்தையுடையவன். பக்தன் இறைவனையே தனது தாயாகக் கருதி அவன் பொன்னடிகளைப் பொழுதும் தொழுது பரவுகிறான். பலகாலும் அவன் புகழை அடுத்தடுத்துக் கூறிய வண்ணமாக இருக்கிறான். வாழ்த்துகிறான். வாழ்த்தப் பெறுகிறான். வணங்குகிறான், வனங்கப் பெறுகிறான் அன்பன். அன்பருலகு "எமது விருப்பம்" எமது விருப்பம் என்று அல்லும் பகலும் அரற்றுவது அவனை வாழ்த்துவதையும் வணங்குவதையுமே. மேலும் மேலும் அவனை வாழ்த்தி வாழ்த்தித்தான் வாழ வழி பெறுகிறது அன்பருலகு. அப்படி அவனை வாழ்த்தி வணங்குவதைத் தனது தவப்பெரும் பேறாகக்கொள்கிறது அன்பருலகு புலவர் நல்லெழுநியார் "எமது விருப்பம்" "எமது விருப்பம்" என்று இதையே பரிபாடலில் எடுத்துரைக்கிறார். வாழ்த்துவார் வாழ்த்தப் படுவதும், வணங்குவார் வணங்கப்படுவதும் புகழ்வார் புகழப்படுவதும் இறைஞ்சுவார் இறைஞ்சப்படுவதும் இவ்வுலக வழக்கு முன்னும் முன்னும் யாம் செய்த தவப்பயன்கள் எல்லாம் இன்னும் இன்னும் இறைவனை வணங்கி வாழ்த்தும் ஆசை வெறியை அள்ளிக் கொடுக்கட்டும் அதுவே எமது உயிர் விருப்பமாக அமையட்டும்.

"முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்

கடந்தவை யமைந்த கழலின் நிழலவை

இருமை வினையுமில வேத்து மன்வ

கருமை வினைமேவும் உள்ளத்தினை

அன்னையென நினை.இ நின்னடி தொழுதனம்