பக்கம்:கலித்தொகை பரிபாடல் காட்சிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 95 & என்று இப்படலத்தின் ஆரம்பமே அழகு வருணனையில் உதயமாகிறது. கும்பகர்ணன், இந்திரசித்து, விபீடணன், முதவி யோரை அனுமன்கண்டு செல்வதாகவும், இலங்கைநகரின் வீதிகள் தோறும் செல்வம் கொழிக்கும் போக்ப் பெருவாழ்வு காண்பதாகவும், இலங்கை மாதேவியோடு விவாதித்துப் போரிட்டு செல்வதாகவும், வரும் இப்படலத்தின் சம்பவங்களிலும் செளந்தரியமும் கவிதையின் மாதுரியமும் மிகுந்தே காணப்படுகிறது. இப்படலத்துள் சீதையைத் தேடுவதிலும் இலங்கை நகரின் வளமிக்க எழிலையே அனுமன் மிகுதியாகத் தேடிக் காண்பதாகக் கம்பன் இப்படலத்தை அமைத்துள்ளான்.

"புள்ளுறை உய்யானத்தை

உறநோக்கி அயல்போவான் கள்ளுறையும் மலர்ச்சோலை

அயலென்று கண்ணுற்றான்" (234)

என்று இப்படலத்தின் இறுதியில்தான் அனுமன் அசோக வனத்தைக் கண்ட செய்தியே கூறப்படுகிறது. எனவே, சுந்தரகாண்டம் என்னும் காண்டப்பெயருக்கு ஏற்ப இரண்டாவது படலாமாகிய ஊர்தேடு படலமும் அழகுநிலைச் செறிவைப் பெற்றே அமைந்திருக்கிறது. இனி அனுமான் சீதையைக் காணும் காட்சியிலுள்ள எழிலைக் காண முற்படுவோம்.

சோகத்தின் நடுவே கண்ட தெய்வீக வனப்பு

நயனங்கள் செய்த நற்றவம் ..........!

காட்சிப் படலத்தை ஒவியம் போலச் சமைத்திருக்கும் கம்பன் திறத்தினால் சீதாபிராட்டியின் தெய்வீக தரிசனத்தைச் சோகத்தின் நடுவே கண்ட அனுமனின் நயனங்கள் மட்டுமல்ல கம்பனைச் சுவைக்கும் ஒவ்வொருவருடைய நயனங்களும் நல்லதவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. முதலாவதாகப் பெரும் பிரிவு நிலையில் பிராட்டியின் துயரமே உருவமான தோற்றம் ஒருபெரும் தெய்வீக வனப்புடன் விளங்கக்