உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

மா. இராசமாணிக்கனார்


விடும்-மலரும். துணிகயம்-தெளிந்த குளம். துதைபு-நெருங்கி. கவவுக்கை-தழுவிய கைகள். போது-பெரிய அரும்பு. உறழ-ஒப்ப. நொந்து-வருந்தி. நைந்து-வருந்தி. உகுவது-அழுவது. இகுபு-வற்றி. மிஞிறு-வண்டின் இனம். ஆலும்-கூவும். புரிந்து-மனம் வேறுபட்டு. நெறி கூந்தல்-பின்னிய கூந்தல். கால்-காற்று.

33. மாவினர் புகுதந்தார்!

பொருள் தேடிப் போயிருந்த கணவன், வரவேண்டிய வேனிற் பருவம் வந்து விட்டது. ஆனால், அவன் வந்திலன். அவன் மனைவி மாளாத் துயர் கொண்டாள். 'வருத்திப் புலம்புவது நன்றன்று; அது பிறர் பழிப்பதற்கு இடமாம்; மனத்துயரை மறைத்து வாழ்தல் வேண்டும்' என அறிவுரை கூறினாள் தோழி. 'நான் மறைக்க முயலினும், கண், தோள் முதலாம் உறுப்புக்கள் காட்டிவிடுகின்றனவே, என் செய்வேன்?' என்றாள் அப்பெண். அந்நிலையில் அவனும் வந்து விட்டான். அவன் வருகையைத் தோழி, அவளுக்குக் கூறியது இது:

"மன்னுயிர் ஏமுற மலர்ஞாலம் புரவீன்று,
பன்னீரால் கால்புனல் பரந்துஊட்டி, இறந்தபின்
சின்னீரால் அறல்வார, அகல்யாறு கவின்பெற,
முன்ஒன்று தமக்குஆற்றி, முயன்றவர் இறுதிக்கண்
பின்ஒன்று பெயர்த்துஆற்றும் பீடுடை யாளர்போல், 5

பன்மலர் சினைஉகச், சுரும்புஇமிர்ந்து வண்டுஆர்ப்ப,
இன்னமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்.
விரிகாஞ்சித் தாதாடி, இருங்குயில் விளிப்பவும்,
பிரிவஞ்சா தவர்தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்
கரிபொய்த்தான் கீழ்இருந்த மரம்போலக் கவின்வாடி 10

எரிபொத்தி என்நெஞ்சம் சுடுமாயின், எவன்செய்கோ?
பொறைதளர் கொம்பின்மேல் சிதர்இனம் இறைகொள
நிறைதளரா தவர்தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
முறைதளர்ந்த மன்னவன்கீழ்க் குடிபோலக் கலங்குபு
பொறைதளர்பு பனிவாரும் கண்ணாயின், எவன்செய்கோ? 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/101&oldid=1754443" இலிருந்து மீள்விக்கப்பட்டது