உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மா. இராசமாணிக்கனார்


பரிவுண்ட-அன்புகொண்ட. தைஇய-அழகு செய்து கொண்ட. இனையல்-வருந்தற்க. ஏம் ஊறு-அச்சம் தரும்.


27. வருகுவர் விரைந்தே!

வேனிற்பருவம் வருவதற்கு முன் வந்து விடுவேன் எனக் கூறிச்சென்ற கணவன், அப்பருவம் வந்துவிட்ட பின்னரும் வந்திலன். அதனால் வருந்திய மனைவி, வேனில் விழாத் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்தத் தூது அனுப்ப விரும்பினாள். அதுகேட்ட தோழி, 'பிரிவை நாம் தாங்கினும் அவர் தாங்க மாட்டார். ஆகவே தூது அனுப்பத் தேவை இல்லை' என்றது இது.

"பாடல்சால் சிறப்பின் சினையவும், சுனையவும்
நாடினர் கொயல்வேண்டா நயந்துதாம் கொடுப்பபோல்
தோடுஅவிழ் கமழ்கண்ணி தையுபு புனைவார்கண்
தோடுஉறத் தாழ்ந்து துறைதுறை கவின்பெறச்,
செய்யவள் அணிஅகலத்து ஆரமொடு அணிகொள்பு 5

தொய்யகம் தாழ்ந்த கதுப்புப்போல துவர்மணல்
வையைவார் அவிர்அறல் இடைபோழும் பொழுதினான்:
விரிந்துஆனா மலராயின், விளித்துஆலும் குயிலாயின்,
பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறூஉம் பொழுதாயின்,
அரும்படர் அவலநோய் ஆற்றுவள் என்னாது 10

வருந்தநோய் மிகுமாயின், வணங்குஇறை! அளிஎன்னோ!
புதலவை மலராயின், பொங்கர்இன வண்டாயின்,
அயலதை அலராயின், அகன்றுஉள்ளார் அவராயின்,
மதலையில் நெஞ்சொடு மதன் இலள் என்னாது,
நுதல்ஊரும் பசப்பாயின் நுணங்குஇறை! அளிஎன்னோ! 15

தோயின அறலாயின், சுரும்பார்க்கும் சினையாயின்,
மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின்,
பூஎழில் இழந்தகண் புலம்புகொண்டு அமையாது
பாயல்நோய் மிகுமாயின், பைந்தொடி! அளிஎன்னோ!
எனவாங்கு, 20

ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு
நாம் தூது மொழிந்தனம் விடல்வேண்டா; நம்மினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/87&oldid=1737261" இலிருந்து மீள்விக்கப்பட்டது