உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கலியனின் வாழ்வும் வழியும் மாளையும் மங்களா சாசனம் செய்து தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணத்தை நிறைவு செய்கின்றார். நடுநாட்டுத் திருத்தலங்களைத் திருமங்கையாழ்வார் திருவுள்ளங்கொண்டதைக் குறிப்பிடுவதற்குமுன் திருகின்றவூர் என்ற திருத்தலத்தைப்பற்றிச் சில சுவையான குறிப்புகளைத் தர எண்ணுகின்றேன். திருநின்றவூர் என்பதற்கு இலக்குமி பொருந்திய தலம்’ என்று பொருள்படுவதைக் குறிப்பிடுகின்றேன். ஊரும் நீர்வளமும் நில வளமும் பொருந்திய ஊர் என்பதை நேரில் கண்டேன். திருமங்கையாழ்வார் இந்தத் திருத்தலத்திற்கு வந்து இத்தலத்து எம் பெருமானை மங்களா சாசனம் செய்ய வில்லை என்று ஒருசாரார் கருதுவர். ஆழ்வார் இத்திருப்பதிக்கு வந்ததாகக் கருதுவோரும் உண்டு. இந்த இருசாரார் கருத்து களையும் உங்கள் முன் வைக்கின்றேன். வரவில்லை என்பார் கருத்து: இத்திருத்தலத்திற்கு எந்த ஆழ்வாரும் வந்து இத்திருத்தலத்து எம்பெருமானை மங்களா சாசனம் செய்யவில்லை. எண்பத்தாறு திவ்வியதேசங்களைச் சேவித்த கலியனும் கூட இங்கு வாராதது ஏனோ என்று சிந்திக் கின்றோம். ஆயினும், இந்த ஆழ்வார் இத்தலத்து எம்பெரு மானை இரண்டு பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த ஊர் எம் பெருமான் பத்தராவிப் பெருமாள், ** என்ற திருப்பெயரால் திகழ்கின்றார். பக்தர்களின் உயிருக்கு உயிராய் இருப்பவர் என்பது இதன் பொருளாகும். அர்ச்சாவதார சேவா ரசிகரான திருமங்கையாழ்வாருடைய பாசுரத்தைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இத்தலத்து எம்பெரு மான் இந்த ஆழ்வார் திருக்கடல் மல்லை எம்பெருமானை மங்க ளாசாசனம் செய்யும் பொழுதும், திருக்கண்ணமங்கை எம் பெருமானுக்குச் சொல்மாலைகள் சாத்தும் பொழுதும் அந்தர்யா மியாக ஆழ்வார் திருவுள்ளத்தில் சேவை சாதிக்கின்றார், 23. பக்தவத்சலம் என்பது வடமொழித் திருநாமம் பலர் இப்பெய ரைச் சூட்டிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். 24. சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி என்ற என்ற நூலின் 20-வது கட்டுரை காண்க:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/24&oldid=775609" இலிருந்து மீள்விக்கப்பட்டது