உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் கொண்டே இருப்பர் இத் தன்மைகளையுடையவர்கள் கட்குடி யர். ஆற்று வெள்ளத்தைக் கூறு மிடத்து: ஈக்கள் வண்டோடு மொய்த்தல் அடித்துச் செல்லும் பல்வகை மலர்களிலுள்ள தேன் முதலியவற்றிற்காக ஈக்களும் வண்டுகளும் மொய்க்கும்: வரம்பு இகழ்தல் - கதை கடந்து செல்லும் வெள்ளம், ஊக்கம் மிகுதல் - வலிமைமிக்குச் செல்லும்; உள் தெளிவு இன்மை - தன்னுள்ளே இருக்கும் நீர் கலங்கியிருத்தல்; தேக்கு எறிதல் - அடித்துக் கொண்டுவரும் தேக்கு மரங்களை வீசுலைக் காணலாம். இப்பாடலில் வண்டுகள் வெள்ளத்தில் மொய்ப்பதை எடுத்துக் காட்டியிருப்பதைக் கண்டு மகிழலாம். இன்னொரு நயமான கருத்து ஆழ்வார் பாடலில் கானப் படுகின்றது. முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவிக் கழுநீரோடு மடவார் . அவர் கண்வாய்முகம் மலரும் செழுநீர்வயல் தழுவும் சிறு புலியூர்ே (விரவி - சேர்ந்து; மடவார் - பெண்கள்) சிறுபுலியூரில் ஊருக்கும் வயலுக்கும் வேறுபாடு தெரிந்து கொள்ள வொண்ணாதபடி இருக்கும் என்கின்றார் ஆழ்வார். நீலோற்பலங்களைப் பார்த்தால் அவ்வூர்ப் பெண்களின் கண் களாகத் தோற்றும்; அரக்காம்பல்களை நோக்கினால் அப் பெண்களின் செவ்விதழ்களை நிகர்ப்பனவாக இருக்கும்; தாமரை மலரைக் காணின், அம்மங்கையரின் முகம்போலக் காட்சி ਡਾ਼ਰ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/90&oldid=775689" இலிருந்து மீள்விக்கப்பட்டது