பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கலீலியோவின்

போப் ஆண்டவராகும் தகுதி பெற்றவர்கள் என்றால்; எதிர்காலத்தில் வானியல், அறிவியல் மட்டும் அல்ல, வேறு என்னென்ன 'இயல்கள்' தனது வளர்ச்சிகளை இழந்து உலகத்தைப் பின்னோக்கித் தள்ளி வேடிக்கைப் பார்க்குமோ என்று சஞ்சலப்பட்டார்.

வானியல் வரலாறு, தத்துவம் ஆகியவற்றைப் போப் அறிந்திராவிட்டால் பரவாயில்லை; அவற்றுக்காகக் கண்டு பிடிக்கப்பட்ட கருவிகள் என்ன? அவற்றின் தத்துவப் பயன்கள் என்னென்ன? அதனால் உலகுக்கு வரும் புதுமை வளர்ச்சிகள் என்னென்ன? இக்கருவிகளால் உலக மக்களுக்குப் பயனுண்டா? இல்லையா? என்ற விபரத்தையாவவது என்னை அழைத்துக் கேட்டிருக்கலாம்.

கண்டு பிடிக்கப்பட்ட தொலை நோக்கிகள், ஊசல் தத்துவங்கள், சந்திரமண்டல ஆய்வுகள், வியாழன் மண்டலச் சந்திரன்கள், அவற்றின் இட நகர்வுகள், சூரியனின் கரும்புள்ளிக் காரண காரியங்கள், இதன் சுழற்சிகள் ஆகியன என்ன?

அதற்காகக் கண்டு பிடிக்கப்பட்டக் கருவிகளின் பயன்கள் யாவை? மக்களுக்கு அதனால் நன்மையா? தீமையா? என்பதையாவது உலகைக்காக்கும் தந்தை, தாய் தகுதிகளில் இருக்கும் போப்பாண்டவர், அக்கருவிகள் மூலமாக இயற்கையின் விநோதங்களைப் பரிசோதனை செய்து நான் கூறுவது உண்மையா? பொய்யா? என்பதையாவது தீர்மானம் செய்திருக்க வேண்டாமா?

இவற்றிலே எதையும் செய்யாமல் செய்திடத்தக்க முயற்சியைக் கூட எடுக்காமல், வேதம் ஓதுகின்ற சாத்தானைப் போல, என்னைப் பைபிளுக்கு விரோதியாக்குவது மன்னிக்க முடியாத ஆண்டவன் கட்டளையாக ஏற்று காலம் ஒரு நாள் தீர்ப்பு தந்தே தீரும் என்பது உறுதி என்று கலீலியோ தனது கருத்துக்களை மக்கள்