பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

55

மன்றத்திலே நின்றுஒரு வானியல் புலமையாளனைப்போல முழக்கமிட்டார். அதைக் கேட்டவர்கள் மனம் கொதித்துக் கூச்சலிட்டனர்!

ஆனாலும், போப்பாண்டவரின் உத்தரவு என்பதற்காக இதற்குக் கீழ்படிந்து கலீலியோ ஓரிரண்டு நாட்களாக எந்தவித ஆராய்ச்சியிலும் ஈடுபடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார்.

எவ்வளவு நாட்களுக்கு ஒரு சிந்தனை முடக்கு வாத நோய்க்குட்பட்ட தளர்வோடு முடங்கிக்கிடக்கும்? எனவே. மூன்றாம் நாளே அவர் தனது ஆராய்ச்சிப் பணிகளை ஆரம்பித்து விட்டார்.

15 கலீலியோ கருத்துக்குத்தடை! கைது சிறை!

போப்பாண்டவர் ஒற்றர்களுக்கும் தெரியாமல், எவர் கண்ணிலும் படாமல், தாம் கண்டறிந்த உண்மைகள் குறித்துத் தனிமையில் தொடர்ந்து பல ஆய்வுகளைச் செய்து வந்தார்.

அவ்வாறு செய்ததின் விளைவாக, அவர் பல புதிய புதிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார். அன்று வரை அவரது ஆராய்ச்சி என்னென்ன புதுமைகளைக் கண்டறிந்ததோ, அவற்றை எல்லாம் தொகுத்து ஓர் ஏட்டில் எழுதினார் பிறகு அதை நூலாகவும் வெளியிட்டார். அதனால், அவரது புதிய தனிமைக் கண்டு பிடிப்புக்களை உலகம் உணர ஆரம்பித்தது.

கலீலியோவின் எதிரிகள் மீண்டும் விழித்தெழுந்தார்கள். கலீலியோ வெளியிட்ட நூல், அவரது பகைவர்கள் இடையேயும், மக்கள் மத்தியிலும் புதியதோர் பரபரப்புச் சூழ்நிலை உருவாக்கியது.