பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கலீலியோவின்


18 கலீலியோ செய்த புரட்சிச் சாதனைகள்!

சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் கலீலியோ, கோப்பர் நிக்கஸ் கருத்து உண்மையானது என்று நிலைநாட்டினார்.

அக்காலத்தில் கலீலியோ பயன்படுத்திய டெலஸ்கோப் என்ற தொலைநோக்கிப் பார்வைக் குழல் நூதனமான ஒரு கருவியாக எல்லோராலும் பாராட்டிப் போற்றப்பட்டது.

அந்தக் கருவியை கலீலியோ பயன்படுத்தியதால், புதிய இயந்திர நுட்பக் கலையுலகத்துக்கு அவர் அடிகோலிட்டார் என்று உலகம் இன்றும் பேசுகின்றது.

இன்றை விஞ்ஞானத்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 16-வது, 17-வது நூற்றாண்டுகளில் பயன்பட்ட விஞ்ஞானக் கருவிகள் மிகப்பழமையானவைதான் என்றாலும், அக்கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள், தயாரித்தவர்கள், இந்தக் காலத்துக்கும் ஏற்ற நவீன உலக மேதைகள்தான் அவர்கள் என்பதிலே எவருக்கும் கருத்து வேறுபாடோ, முரண்பாடோ இருக்க முடியாது.

இப்போது, கலீலியோவின் சாதனைகள் என்ன? ஆவர் எதையெதை எவ்வாறெலாம் ஆராய்ச்சி செய்தார் என்பதைப் படிப்படியாக, அதனதன் வளர்ச்சிக் கேற்றவாறு பார்த்தால்தான் அவர் எவ்வளவு பெரிய அரிய உழைப்பாளர் அவற்றுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டிருப்பார் என்ற அருமைகளை உணர்ந்து நாம் பெருமை பெற்றவர்கள் ஆவோம்! அவரது வியர்வை நீர் சிந்திய உழைப்பின் முத்துக்கள் இதோ:

★ கலீலியோ, அவரது புதிய கருவிகளைக் கண்டு பிடித்து உலகுக்கு வழங்கியவைகளிலே மிகமுக்கியமானவை, பெண்டுலம் என்ற ஊசல் தத்துவம், ஒன்று.