பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

73

இருந்த போது, அணுவைக் கண்டு பிடித்தது எல்லாவற்றையும் மாற்றி விட்டது. ஆனால் மனிதன் மனம் மட்டும்தான் மாறவில்லை’ என்று கூறிவிட்டுக் கண்ணீர் சிந்தி கவலைகளோடு உயிர் விட்டார்.

இப்படிப்பட்ட மனம் கொண்ட மனிதர்கள், கலீலியோ காலத்திலும் இருந்தார்கள், ஆதனால்தான், அவர் இறந்தபோது கலீலியோவுக்கு யாரும் நினைவுச் சின்னம் எழுப்பாமல் அக்கால மக்கள் அலட்சியமாக அவரது உழைப்பை அவமரியாதை செய்து விட்டார்கள்!

அதற்கு அந்த அறியாமைப் பிறவிகள் அறிவித்தக் காரணம், கலீலியோ சிறையிலே மாண்டார் என்ற ஒரு விசித்திரமான காரணமாகும் சிறையிலே, செத்தவர்கட்கு எல்லாம் நினைவுச் சின்னம் அமைக்கக் கூடாது என்றால், உலகத்தின் அறிவுத் தியாகத்திற்கு சிலைகளே வைக்க முடியாதே! பாராட்டிப் போற்ற முடியுமா?

ஆனால் பிற்கால உலக அறிவாளிகள், கலீலியோ காலத்து அறிஞர்களை அவமானப்படுத்தும் வகையில் கலீலியோ என்ற ஒரு மாபெரும் மனித மேதைக்கு, விஞ்ஞான விந்தைகளை உருவாக்கிய வித்தகனுக்கு, அறிவியல் உலகத்தில் தனக்கென்ற ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட அற்புத தியாகிக்கு, அவர் இறந்த பின்பு உடல் புதைக்கப்பட்ட பிளாரன்ஸ் என்ற நகரிலே, அறிவுள்ள மக்கள் அவருக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து கண்ணீர் சிந்தியபடியே பாராட்டினார்கள்!

அறிவியல் உலகுக்கு முதன் முதலாக சில விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மூலமாக, அறிவியல் கருவிகளை வழங்கி, எதிர்கால உலகுக்கு ஒரு மனப்படமாக மட்டும் அல்ல; மனப்படமாக அமைந்து விட்ட மாபெரும் வானவியல் அறிஞரான கலீலியோ கலீலீயிக்கு நாமும் புகழ் அஞ்சலியைச் செலுத்தி வணங்குவோமாக?