பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆக்க நிலை

297

ஆக்கினாவா

ஒரு பெண் பறவை ஒரு முட்டைதான் வெறும் கல் தரையில் இடும். பெரிய ஆக் என்னும் பறக்க முடியாத ஓர் இனமிருந்தது. அது பெரிய வாத்தளவு இருந்தது. மனிதன் அதன் இறைச்சிக்கும் இறகுக்கும் ஆசைப்பட்டு, ஒரு பறவைகூட இல்லாமல் ஒழித்துவிட்டான். சின்ன ஆக் 8 அங்கும் நீளமுள்ளது.

ஆக்

ஆக்கள் அலகு மிகப் பெரியதாக இருக்கும். உள்ளே கடற்பஞ்சுபோல அதன் அமைப்பு இருக்கும்.

ஆக்க நிலை (Conditioning) : 1900ஆம் ஆண்டில் ரஷ்யாலில் பாவ்லேல் என்னும் விஞ்ஞானி நாய்களின் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்நீரை அளக்கும் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். வாயில் உணவு இருக்கும்பொழுது உமிழ்நீர் வருவது இயற்கை. அனால் உணவைப் பார்க்கும்பொழுதே நாயின் வாயில் உயிழ் நீர் வருவதைப் பால்லோவ் கவனித்தார். அதுமட்டுமல்ல, உணவு கொண்டுவரப்படும்பத்திரத்தைப் பார்த்தாலும், அல்லது உணவு கொடுக்கும் வேலையாளைப் பார்த்தாலும், அல்லது அவன் காலடி ஓசையைக் கேட்டாலும் உமிழ்நீர் நாயின் வாயில் ஊறியது. இது பழக்கத்தினால் ஏற்பட்ட செயல் என்பது நிச்சயம்.

இவ்விதம் சூழ்நிலையை ஒட்டிப் பழக்கக்தினால் ஏற்படும் செயலை ஆக்கநிலை என்பர். பால்லோவ் இதன் தத்துவத்தை ஆராய்வதில் ஈடுபட்டார். ஒரு மணியை அடித்ததும் நாய்க்கு உணவு அளிக்கப்பட்டது. இவ்விதம் பழகிய பின் ஒருநாள் மணியடித்துச் சிறிது நேரம் பொறுத்து உணவு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விதம் சில நாள் சென்றபின், மணியடித்ததும் உணவு கொண்டு வராமலிருந்தாலும் நாயின் வாயில் உமிழ்நீர் ஊறியது. பல நாட்களுக்குப் பின்னும் இப்படியே உமிழ்நீர் வெளிப்பட்டது.

இம்மாற்றம் இப்படியே வெகுநாள் திடமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில தடவைகளாவது மணியடித்ததும் உணவு கொடுத்தால்தான், பின் மணியடித்தால் உணவு இல்லாதிருக்கும்பொழுதும் உமிழ்நீர் வருமென்து பாவ்லோல் அறிந்தார். மணியை மட்டும் அடித்து உணவு கொடுக்காமல் சிலநாள் பழக்கினால் முன்பழக்கம் மாறிவிடும். மணி அடித்தால் நாயின் வாயில் உமிழ்நீர் வராது.

உணவு வாயிற் செல்லும்பொழுது இயற்கையாக வரும் உமிழ்நீர், இந்த ஆக்கநிலையின் காரணமாக உணவு இல்லாதிருந்தாலும், ஒரு மணியின் ஓசையினால் வெளிவருவது ஒரு விந்தையே. ஆனால் இம்மாதிரி விந்தைகள் நம்மைச் சுற்றி எப்பொழுதும் நடந்து கொண்டே யிருக்கின்றன. அறிந்தும் அறியாமலும் இவ்வித ஆக்கநிலை நம் வாழ்வில் இடம் பெற்று நம் நடத்தையில் பலவீத மாறுதல்களை உண்டுபண்ணுகிறது.

ஒரு குழந்தை பேரொலியைக் கேட்டால் திடுக்கிட்டு பயந்துவிடும். இது இயற்கையாக ஏற்படுவது. ஒலி உண்டாகும்பொழுது அது ஒரு கம்பனிப் போர்வையைத் தொட்டுக்கொண்டிருந்தால், ஒலியைக் கேட்டதும் உடனே கையை அதிலிருந்து எடுத்துவிடும். இப்படியே கம்பளிப் போர்வையைத் தொட்டுக்கொண்டிருக்கும்பொழுது பலதடவை ஒலி உண்டாக நேர்ந்தால், சில நாட்களி்ல் அது கம்பளிப் போர்வையைப் பார்த்த உடனேயே அச்சம் கொள்ளும். ஒலி இல்லாமலிருந்தாலும் இந்த பயம் உண்டாகும். அச்சத்தையும் வெறுப்பையும் அப் போர்வையே உண்டாக்கிவிடும்.

தவிர, சிறு குழந்தைகளின் உள்ளத்தில் பதியும் எவையும் எளிதில் மாறுவதில்லை. ஆதலால் இந்த அச்சம் அக்குழந்தையின் உள்ளத்தில் மாறாமலே யிருந்துவிடும். பெரியவனானாலும் இவன் கம்பளிப் போர்வைக் கண்டால் வெறுப்பும் அச்சமும் உள்ளவனாகவே மாறிவிடுவான். இவ்விதம் எத்தனையோ உணர்ச்சிகள் நம்மிடத்தில் உண்டாகின்றன. அவற்றை ஆராய்ந்தால் அவை நம் குழந்தைப் பருவத்தில் இப்படிப்பட்ட ஆக்கநிலையால் ஏற்பட்டவை என்பது தெளிவாகும். கணித ஆசிரியரின் பேச்சும், நடை, உடை, பாவனைகளும் நமக்கு வெறுப்பை யளித்தால், அவர் கற்றுக்கொடுத்த கணிதமே வெறுப்பை அளிப்பதாக மாறவிடுகிறது. இதை அறியாமல் நமக்குக் கணிதம் இயற்கையிலேயே வெறுப்பையளிப்பது என நினைப்பவர் பலர். அச்சமும் வெறுப்பும் மட்டுமல்ல, அன்பு, கருணை என்னும் இவையும் பல்வேறு ஆட்களிடத்தும், சந்தர்ப்பங்களிலும் உண்டாவது இங்ஙணமேயாம். இதிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால், குழந்தைகளை வார்ப்பவர் அனாவசியமான அதிர்ச்சிகளும் வெறுப்புக்களும் குழந்தைகளின் உள்னத்தில் உண்டாக்கமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதே. அ. சு. நா. பி.

ஆக்கன் (Aachen) மேற்கு ஜெர்மனியிலுள்ள நகரம். இது ஒரு சமயம் பிரெஞ்சுக்காரர் வசமிருந்த போது ஐலா ஷாப்பெல் என்று வழங்கி வந்தது. இங்குள்ள கந்தக நீர்ச்சுனைகள் பேர்போனவை. அருலுள்ள சுரங்கங்களிலிருந்து எடுக்கும் இரும்பு, துத்தநாகம், ஈயம் ஆகியவற்றின் உதவியால் பல பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. இந்த நகரம் ரோமானியர் காலமுதல் இருந்து வருவது. சார்லமேனுடைய வட தலைநகரமாகவும் இருந்துளது. 1818-ல் இந்நகரம் ஜெர்மானியர் வசம் வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் 1944 அல்டோபரில் நேசப்படையினரால் கைப்பற்றப்பட்டது. மக் : 1,62,164 (1989).

ஆக்காட்ஸ்க் கடல் (Okhotsk sea) சோவியத் யூனியனுடைய கீழ் எல்லையாகப் பசிபிக் சமுத்திரத்திலுள்ளது, அயிரம் மைல் நீளமும், அறுநூறு மைல் அகலமும் உள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். சிறு நதிகள் வந்து சேர்கின்றன. இது வியாபாரக் கப்பல்கள் போவதற்குப் பயன்படுகிறது. பரப்பு: சு. 5,82,000 ச. மைல், மிக அதிக ஆழம் 10,554 அடி.

ஆக்காடு (Akkad) என்பது பண்டைப் பாபிலோனியா இரண்டு மாணங்களாகப் பிரிந்திருந்த பொழுது வடமாகானத்தின் பெயராகும். அசிரியா பாபிலோனியா ஆகியவற்றின் வேதநூல்கள் பழைய ஆக்காடிய மொழியிலேயே எழுதப் பெற்றிருந்தன. பாபிலோனிய அரசை நிறுவிய நிம்ரடு கட்டின நான்கு நகரங்களில் ஒன்றுக்கும் ஆக்காடு என்று பெயர்.

ஆக்கிட்டா (Akita) வட ஜப்பானில் ஹோன்ஷு தீவிலுள்ள ஒரு துறைமுகம். மக்: 2.06.139 (1946).

ஆக்கினாவா (Okinava) ரூக்கூத் தீவுக்கூட்டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அரணுடையது. இரண்டாவது உலக யுத்தத்தில் கடும் போர் ஒன்று இங்கே நடந்தது. மக்கள் ரூயுகுயுவர் ; ரூயுகுயு மொழி பேசுகிறார்கள். இதன் தலைநகரம் நாகா இந்தத் தீவில் சர்க்கரை, வாழை, அரிசி, சவ்வரிசி உண்டாலின்றன. மக்: 4,85,681 (1940).

38