பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசியா

337

ஆசியா

தேசீய மதமாகும். சவுதி அரேபியாவில் மத வைராக்கியம் நிறைந்த வகாபிட் மதவகை காணப்படும். ஈரானைப்போல் ஈராக்கும் ஷியா முஸ்லிம் நாடாகும். மதத்துக்காக உயிர் துறந்த அலியையும் ஹுசேனையும்கொண்டாடப் பெறும் தலங்களாகிய நெஜெப் என்பதும் கெர் பேலா என்பதும் இங்குத்தான் உள்ளன. அராபியர்கள் ஒரு காலத்தில் பெரிய மாலுமிகளாக இருந்தனர். அவர்கள் மலையாளம், இந்தோனீசியா ஆகிய நாடுகளுடன் வாணிபம் செய்து வந்துள்ளார்கள். கி. பீ.

வட ஆசியா : வட ஆசியா என்பது சைபீரியாவினூடே செல்லும் இருப்புப்பாதைக்கு வடக்கேயுள்ள ஆசியப் பகுதியைக் குறிக்கும். அந்தப் பாகத்தில் பண்டைக்கால முதல் பதினாறாம் நூற்றாண்டின் இறுதிவரைப் பல சுதேச மக்கள் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் ரஷ்ய மக்கள் வந்து குடியேறினர். இப்பொழுது ரஷ்யர் தொகையே சுதேச மக்கள் தொகையைவிடப் பெரிதாகும். ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நிலங்கள் மேற்குச் சைபீரியாவும் விளாடிவாஸ் டாக் என்னும் இடத்தைச் சுற்றியுள்ள பசிபிக் கடற்கரைப் பிரதேசமு மாகும். அவர்களில் மிகச்சிலரே வடக்கிலும் வடகிழக்கிலும் காணப்படுகின்றனர்.

சுதேச மக்களை ஜோக்கல்சன் என்னும் ஆசிரியர் மங்கோலாயிடு, அமெரிக்கனாயிடு எனவும், சாப்பிளிக்கா என்னும் ஆசிரியர் புதுச் சைபீரியர், பழைய சைபீரியர் எனவும் இரண்டு முக்கிய இனங்களாகப் பிரிக்கின்றனர். சோவியத் ஆசிரியர்கள் இவர்களை யூரல் ஆல்டேகியர் என்றும் பழைய ஆசியர் என்றும் பிரிக்கிறார்கள். இம்மூன்று முறைகளும் பெரும்பாலும் ஒரே பொருளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. சோவியத் அதிகாரிகள் பெரும்பான்மையான சுதேச இனங்களுக்குப் புதிதாகப் பெயரிட்டுளர். அப்பெயர்கள் பெரும்பாலும் சுதேச மக்கள் கையாண்டுவரும் பெயர்களாகவே இருக்கின்றன.

இந்த இரண்டு முக்கிய இனங்களில் அடங்கிய பல குழுக்களைப் பற்றிக் கீழே தரும் விளக்கத்தில் ஒவ்வொரு குழுவுக்கும் முதலில் காணும் பெயர் புதுப்பெயர்; அடுத்து வரும் பெயர் ஆங்கில உருவம் பெற்ற பெயர். மக்களின் தொகை 1926ஆம் ஆண்டுக் கணக்குப்படியுள்ளது.

பழைய ஆசிய இனத்தவர் பெரும்பாலும் ஆசியாவின் வடகிழக்கு மூலையிலேயே வசித்துவருகிறார்கள். லூரோ வெட்லானி (Luorovetlani அல்லது சக்ச்சீ Chuk-chee மக்: 12,332)கடற்கரையில் வசிக்கின் றனர். அவர்கள் மான் வளர்த்தும், வேட்டையாடியும் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆசிய எஸ்கிமோக்கள் யூயிட் - Yuit என்னும் புதியபெயர் அரிதாகவே வழங்குகிறது ; தொகை: 1293. வேடர்கள்; ராங்கல் (Wrangel) தீவிலும் பேரிங் ஜலசந்திப்பகுதியிலும் வாழ்கின்றனர். உனங்கானியர் (Wnangany அல்லது ஆலூட்கள் Aleuts மக்: 351) பேரிங் ஜலசந்தியிலுள்ள கம்மாண்டர் தீவுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் மீன்பிடிப்போர் ;19ஆம் நூற்றாண்டில் அலூஷியன் தீவுகளிலிருந்து அழைத்து வரப் பட்டவர்கள். இந்த மூன்று குழுவினரும் வட அமெரிக்கப் பூர்வ குடிகளுடன் உடல் அமைப்பு, பண்பாடு, மொழி ஆகியவற்றில் ஒற்றுமை உடையவர்கள். நிமிலானியர் (Nymylany அல்லது கோர்யாக்கர்கள் Koryaks தொகை : 7.439); காம்சட்கா (Kamchatka) தீபகற்பத்தின் வடகோடியிலும், இதல்மனியர் (Itelmeny அல்லது காம்சடலர் Kamchadals தொகை: 4.217); மேற்குக் கரையிலும் வசிக்கின்றனர். இரு குழுவினரும் மீன் பிடிப்பவர்கள்; நிமிலானியர் மான் வளர்க்கவும் செய்கிறார்கள். ஓடுலியர் (Oduly அல்லது யுகாகீர்கள் (Ytkagirs) மக் : 440) ; எடலியர் (Eteli அல்லது சுவாண்டிஸியர் (Chwvantsy மக்: 684) ; ஆகிய இரு குழுவினரும் உறவுடையவர். அவர்கள் பனிமான்களும் நாய்களும் வளர்த்துக் கொண்டு, அனடிர் (Anadyr) நதியின் மேற்பாகத்துக்கும் கொலிமா (Kolyma) நதிக்கும் இடையே வசிக்கிறார்கள். நிவிக்கியர் (Nivkhi அல்லது கில்யாக்கர் Gilyaks மக்: 4,076) மீன் பிடிப்பவர்; சக்காலின் தீவின் வடபாதியிலும் அதற்கு எதிர்த்துள்ள கண்டப் பகுதியின் கரையோரத்திலும் வசிக்கிறார்கள். கேதியர் (Keti அல்லது யெனிசி ஆஸ்டியகர் Yenisey Osty-aks ; மக் :1,500) மேற்குக்கோடியில் யெனிசி நதியின் நடுப்பகுதிப் பிரதேசத்தில் வசிக்கிறார்கள்.

யூரல்-ஆல்டேயிகர் குழு பழைய ஆசியர் குழுவிலும் பெரியது. இதுவும் பின்னோ-உக்ரியனர், சாமோயதர், துருக்கியர், மங்கோலிக்கியர், துங்குர் என ஐந்து பகுதியாகப் பிரிகிறது. (துங்குர்கள் ஆல்டேயிகர் குழுவினர்தாமா என்று ஜோக்கல்சன் ஐயுற்று, யூரல்-ஆல்டேயிக் குழு என்று கூறாமல் மங்கோலாயிடு குழு என்று கூறுகிறார்). பின்னோ உக்ரியனர் முக்கியமாக ஐரோப்பாவில் காணப்படுகின்றனர். கான்டி (Khanty அல்லது ஆஸ்டாயிகர் Ostyaks ; தொகை : 22,300) என்பவரும், மான்சி (Mansi அல்லது வோகல் Voguls; தொகை: 5.754) என்பவருமே ஆசியாவில் உளர். அவர்கள் ஆப் (Ob) நதியின் கீழ்ப்பகுதிப் பிரதேசத்திலேயே வசிக்கிறார்கள். சாமோயது பகுதியினரில் வெண்கடலிலிருந்து யெனிசி ஆறுவரை கடற்கரையோரத்திலுள்ள தூந்துரப் பிரதேசத்தில் வசிக்கும் நென்டிசி (Nentsy அல்லது சாமோயதர் Samoyed ; தொகை: 15.462) என்பவரும், யெனிசி ஆற்றின் கிழக்கே காதங்கா (Khatanga) வரை வசிக்கும் என்டிசி (யெனிசி சாமோயதர்; தொகை: 400) என்பவரும். ஞானசானியர் (Nganasany அல்லது தாவஸ்கி சாமோயதர் அல்லது தாவகிஸ்கியர் அல்லது யுராக்கள்; தொகை : 867) என்பவரும், யெனிசி ஆற்றின் கரைப்பகுதியில் வசிக்கும் செல்குபியர் (Selkupy அல்லது ஆஸ்டியக் சாமோதர்; தொகை: 1,408) என்பவரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பனிமான் வளர்ப்பவர்கள். துருக்கியக் கூட்டத்தார். சைபீரியாவில் மிகுதியாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இங்குக் குறிக்கப்படும் ஆசியப்பகுதியின் தென் எல்லையை ஒட்டிய பிரதேசத்திலுள்ள தார்த்தார் மக்களேயாவர். அவர்களுள் முக்கியமானவர் லேனா நதியின் நடுப்பகுதியையும் கரைப் பகுதியையும் அடுத்த பிரதேசத்தில் வாழும் யாகுதி (Yakuty ; தொகை: 2,40,709). பைகால் (Baikal) ஏரியை அடுத்து ஆடு மாடு வளர்க்கும் புரியாத்-மங்கோலியர் (Beryat Mongoly அல்லது புரியாதியர் Buryats; தொகை: 2.37,709) என்பவரே இப்பகுதியில் காணப்படும் மங்கோலிக்கிய மக்களாவர். துங்குர்களே பெரும்பகுதியில் உளர். அவர்களுக்குள்ளும் பெருந் தொகையினராக உள்ளவர்கள் சக்காலின் முதல் யெனிசி வரையுள்ள கிழக்குச்சைபீரியாவில் அங்குமிங்குமாக வாழும் எவன்கி (அல்லது பனிமான் துங்குர்; தொகை : 37,546) என்பவரே யாவர். எவனி (Eveny அல்லது லாமுதர் Lamuts ; தொகை : 12,000); கொல்யாமா வடிநிலத்தில் வசிக்கிறார்கள். இந்தக் குழுவைச் சேர்ந்த சிறு பகுதியினர் காதங்கா பள்ளத்தாக்கில் வசிப்பவரும், யாகுதிகூட்டத்தைச் சேர்ந்தவருமான தோல்கனியர் (Dolgany; தொகை: 1,385)